சட்டசபைக்கே வராமல் பேச விடவில்லை என்பதா?:ஜெவுக்கு சபாநாயகர் கண்டனம்
சென்னை:
சட்டசபைக்கே வராமல் தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளதற்கு சபாநாயகர்ஆவுடையப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் எழுந்து ஒரு ஒழுங்குப் பிரச்சனையைக் கொண்டுவந்தார். அவர் பேசுகையில்,எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் 30ம் தேதி ஜனநாயகத்தின் கருப்பு தினம்என்றும், தன்னை சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என்றும், ஜனநாயகத்தை படுகொலைசெய்துவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அன்றைய தினம் அவர் சட்டசபைக்கே வரவில்லை. அவர் வருவார் என்று நாடு மட்டுமல்ல அவரதுகட்சி எம்எல்ஏக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர் வரவேயில்லை.
அவர் வந்திருந்தால் அவர் பேச வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடும். அவரை எதிர்க் கட்சித் தலைவர் என்றுஅங்கீகரித்து கடிதம் அனுப்பப்பட்ட பின்னரும் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படுவதாக கடிதம் வரும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இது அவையின் மாண்பை, கண்ணியத்தை மீறிய செயல் என்றார் ஞானசேகரன்.
இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதிலளிக்கையில்,
நேற்று மாலை ஜெயலலிதாவின் அறிக்கை வெளியாகியுள்து. 29ம் தேதி இரவு 12 மணிக்குத் தான் தன்னை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கும் கடிதம் கிடைத்ததாகவும், 30ம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்ற அனுமதிதரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், 29ம் தேதி பிற்பகல் முதலே அவர் எதிர்க் கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். வழக்கமாகஅவருக்கு தபால் எடுத்துச் செல்லும் நபர் மூலமாக கடிதம் கொடுக்கப்பட்டுவிட்டது.
சட்டசபைக்கு வரும் முன்பே அவர் பேச வாய்ப்பு உண்டா, இல்லையா?.. எவ்வளவு நேரம் பேசலாம்என்பதையெல்லாம் தெரிவிக்க முடியாது. அது சட்டசபையின் மரபும் அல்ல.
சட்டசபைக்கு வராமலேயே, தனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று ஜெயலலிதா பேசுவது சரியல்ல. திட்டமிட்டுதனது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிய எதிர்க் கட்சித் தலைவர் பழியைத் தூக்கி என் மீது போட்டுவிட்டுதப்பிக்க முயல்வது நியாயமானது அல்ல என்றார் ஆவுடையப்பன்.












Click it and Unblock the Notifications