மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக சந்தோஷ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சந்தியா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஓவர்சீஸ் மேன்பவர் நிறுவன தலைவராக பிந்து மாதவன், வருவாய்த்துறை அரசுஇணைச் செயலாளராக டாக்டர் சுவர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் கழக நிறுவனதலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஸ்ரீபதி,
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழக தலைவர் மற்றும்நிர்வாக இயக்குனராக கிறிஸ்துதாஸ் காந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பங்கஜ் குமார் பன்சால் பொதுப்பணித்துறை இணைச் செயலாளராகவும்,உயர்கல்வித்துறை செயலாளராக கணேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவல் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையராகசந்திரமோகன் மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications