ஜெ மீதான வழக்கு: 14ம் தேதி முக்கிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது வருமானவரித்துறை தொடர்ந்துள்ள வழக்கில் வருகிற 14ம் தேதி முக்கிய தீர்ப்புவழங்கப்படவுள்ளது.

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்யவில்லை என்று கூறி எழும்பூர் பொருளாதார குற்ற தடுப்பு நீதிமன்றத்தில்வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை தாமதமாகி வந்ததால், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தைவருமான வரித்துறை அணுகியது.

இதையடுத்து இந்த கோரிக்கையை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிவெடுக்குமாறுஎழும்பூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ் உத்தரவிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய வருமானவரித்துறைக்கு அனுமதி கிடைக்குமா என்பது 14ம் தேதி தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+