பாண்டு நீதிமன்றத்தில் சரண்: ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவல்துறை அதிகாரியை தாக்க முயன்று, பணி செய்ய விடாமல் தடுத்ததாகதொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வர முயன்றபோதுஅவர்களை தலைமைச் செயலக வாயிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால்அவர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வசந்தன் வட சென்னை இணை ஆணையர் ரவிஆகியோருடன் பாண்டுரங்கன் மோதலில் ஈடுபட்டார். அவர்களைப் பிடித்து கீழேதள்ளினார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகபாண்டுரங்கன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி பாண்டுரங்கன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் பாண்டுரங்கன் திடீரென சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பாண்டுரங்கன் மீது ஜாமீனில் வெளி வரக் கூடிய வழக்கு பதிவு செய்ய்பட்டால்அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வெளியில் வந்த பாண்டுரங்கன், என் மீது பொய் வழக்குப்போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும் எதிர்க் கட்சிகளையும் இந்த அரசு ஒடுக்கமுயல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+