பிஇ, எம்பிபிஸ் நுழைவுத் தேர்வு-4ம் தேதி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர நடத்தப்பட்டபொது நுழைவுத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் எனஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் பேசுகையில், பொது நுழைவுத் தேர்வுமுடிவுகள் நாளை மறுநாள் (4ம் தேதி) வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து ஜூலை10ம் தேதி பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும்.

தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக கல்லூரி முதல்வர்கள்மற்றும் அதிபர்களுடன் வருகிற 6ம்தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதுஎன்றார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது தவறு என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்பொன்முடி கண்டனம் தெரிவித்து ஒரு கூட்டத்தில்பேசியுள்ளது குறித்துவிஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணா பல்கலைக்கழகவளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைதொடரும் என்று தெரிவித்தார் விஸ்வநாதன்.

5ம் முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பம்:

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 5ம்தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.

இதுபற்றி மருத்துவக் கல்லூரி இயக்குநர் விஜயலட்சுமி கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரிகள், மதுரை, கோவை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம்,திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி என 13 மருத்துவக் கல்லூரிகளிலும்சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கானவிண்ணப்பங்கள் வரும் 5ம் தேதி முதல் வழங்கப்படும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் சாதிசான்றிதழின் அட்டெஸ்டு செய்த நகலை கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூன் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலைமுதல் வாரத்தில் சேர்க்கைக் கான கவுன்சிலிங் நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில்இருந்து வகுப்புகள் தொடங்கப்படும்.

மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என இயக்குநர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+