காவிரி: திமுக அரசு மெத்தனம்- திருமா தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நடுவர் மன்றம் அனுப்பிய மதிப்பீட்டு அறிக்கை குறித்து திமுக அரசு ஆய்வேசெய்யாமல் மெத்தனமாக இருப்பது வருத்தம் தருகிறது என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்றத்தால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு தனது அறிக்கையைநடுவர் மன்றத்திடம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்திற்கு ஆண்டுக்கு395 டிஎம்சி நீரும், புதுவைக்கு 5 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும் என்றுபரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும் கேரள அரசுகளுக்கு காவிரிநடுவர் மன்றம் அனுப்பி கருத்து கேட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தவுடனேயேகர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளின்கருத்தையும் அறிந்து, மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாகஅறிவித்துள்ளது.

ஆனால தமிழக அரசு மெத்தனமாக, மெளனமாக இருந்து வருகிறது. இது வருத்தம்தருகிறது. இந்த அறிக்கை தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும்சொல்லப்படவில்லை. முதலவர் தனது பதில உரையிலும் இதுகுறித்து எதையும்கூறவில்லை. இது வேதனை தருகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றுவதிலும் அவர்களைதலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதிலும், வழக்குபோடுவதிலும் காட்டும் அக்கறையை காவிரிப் பிரச்சினையில் திமுக அரசு காட்டாமல்மெத்தனமாக இருந்து வருவது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

மதிப்பீட்டுக் குழு அறிக்கை குறித்து மாநில அரசுகள் வழங்கும் கருத்தின்அடிப்படையில்தான் நடுவர் மன்றம் தீர்ப்பை வழங்கும் என்பதால் உடனடியாகதமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சிகளின்கருத்தையும் அறிந்து, விவசாயிகளுக்கு சாதகமான பதிலை நடுவர் மன்றத்திற்குதமிழக அரசு அனுப்ப ஆவண செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+