மதிமுகவிலிருந்து கவிஞர் முத்துலிங்கம் விலகல்
சென்னை:
முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரும், முன்னாள் அரசவை கவிஞருமான கவிஞர் முத்துலிங்கம் மதிமுகவில்இருந்து விலகியுள்ளார்.
வைகோவுக்கு மிக நெருக்கமான பொடா நாகராஜனும் விலகி விஜயகாந்த கட்சியில் சேர்ந்துள்ள நிலையில்முத்துலிங்கமும் விலகியுள்ளார்.இது குறித்து முத்துலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுக ஒரு மண் குதிரை, மாயம் நிறைந்த மாரீச மான், கருத்துக்களை மயக்கும் கானல் நீர். அதனால் மதிமுகஎன்ற மாயவலையில் இருந்து என்னை நானே விடுவித்துக் கொள்கிறேன்.
மொழி உணர்வு, இனவுணர்வு உள்ளவர், இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கருத்துடையவர், நான் எழுதிய 2நூல்களை வெளியிட்டவர் என்ற நன்றியுணர்வால் வைகோ தலைமையின் கீழ் இணைந்தேன்.
ஆனால் சேர்ந்த பிறகுதான் தேரிந்தது மதிமுக எதற்கும் உதவாத மண் குதிரை என்பதும் அரசியல் கோமாளியாகஇந்த தேர்தல் வைகோவை ஆக்கிவிட்டதே என்றும் அனுதாபப்படுகிறேன்.
இலக்கியவாதிகளுக்கு ஏற்ற இடம் மதிமுக இல்லை. அந்த கட்சியில் இருப்பது தற்கொலைக்கு சமம். துருப்பிடித்தஓரு அரசியல் இயக்கத்தில் இருக்க விரும்பவில்லை.
போர்களத் துப்பாக்கியாக இருக்கவே விரும்புகிறேனே தவிர பொம்மை துப்பாக்கியாக இருக்க விரும்பவில்லைஎன்று கூறியுள்ளார்.
மக்கள் நினைப்பது என்ன தெரியுமோ?:
இதற்கிடையே நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்துள்ளது திருப்திகரமான வெற்றி அல்ல. குறைந்த ஓட்டுக்களைத்தான் அவர்கள் பெற்றுள்ளனர். இதைவெற்றி என்று கூற முடியாது.
திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 13 லட்சம் ஓட்டுக்கள்தான். பொதுமக்கள் இப்போது என்னநினைக்கிறார்கள் என்றால் நாம் அதிமக கூட்டணிக்குத்தானே ஓட்டு போட்டோம், பிறகு எப்படி திமுக கூட்டணி ஜெயித்தது என்றுநினைக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் பலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இது ஆளுங்கட்சிக்கு பயத்தைக் கொடுத்துள்ளது. எனவே இந்த வெற்றிஉண்மையில் அதிமுக கூட்டணிக்குத்தான்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். புதிய வியூகம் அமைத்துஉள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications