அதிமுக பிரமுகர் படுகொலை-ஜெ நேரில் அஞ்சலி
சென்னை:
உள்ளாட்சித் சென்னை அம்பத்தூரில் அதிமுக நகர செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரதுஉடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த ரவி, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார்.அந்தப் பகுதி நகரச் செயலாளராகவும் இருந்தார்.இவரது அலுவலகம் அம்பத்தூரில் உள்ளது. நேற்று ரவி தனது அலுவலகத்தில்இருந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து ரவியை சரமாரியாக வெட்டித்தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவி இறந்தார்.
இதையடுத்து முகப்பேர் மற்றும் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ரவியின் உடலை போலீஸார் கைப்பற்றி ராயப்பேடடை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ரவியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் மேற்கு முகப்பேரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரவியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றுஅவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரவியின்குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடந்து வருகிறது. திமுகவினரின் இந்தவன்முறையால் அதிமுகவினர் சோர்ந்து போய் விட மாட்டார்கள்.
அதிமுகவினர் ரவியின் மறைவை சோகத்துடன் அனுசரித்து வரும் நிலையில், திமுகதலைவரின் பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருவதுமனிதாபிமானமற்ற செயல். இந்த நிலை அதிக நாட்களுக்கு நீடிக்காது என்றார் அவர்.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டுத்தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் வெங்காடச்சலத்தின் சகோதரர் மகன் தனதுவீட்டில் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் கம்பியால் அடித்த பலத்த காயங்கள் காணப்பட்டன. அவர் தேர்தல்முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications