2 ரூபாய் அரிசி திட்டம் அமல்-ரேசன் கடைகளில் அலைமோதும் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தரும் திட்டம் இன்று முதல் அமலுக்குவந்தது. இதனால் மாநிலம் முழுவதுமே ரேசன் கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

தனது பிறந்த தினத்தையொட்டி இந்தத் திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைத்தார்முதல்வர் கருணாநிதி.

தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகே திரு.வி.க. குடியிருப்பில் உள்ளஅமுதம் அங்காடி என்ற ரேஷன் கடைக்குச் சென்ற கருணாநிதி அங்கு 2 ரூபாய்க்கு 1கிலோ அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து 25 பேருக்கு அரிசிவழங்கினார்.

(இந்த ரேசன் கடை அமைச்சர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியின் கீழ் வருவதுகுறிப்பிடத்தக்கது)

இதையடுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்தத் திட்டம் அமலாவதையொட்டி ரேசன் கடைகள் எல்லாமஅலங்கரிக்கப்பட்டிருந்தன. அரிசி வாங்க வந்தவர்களுக்கு திமுகவினர்இனிப்புகளையும் வழங்கினர்.

இதையடுத்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தையும்கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் 33,333 பெண்களுக்கு இன்று திருமண நிதி உதவியாக ரூ. 15,000 நிதிவழங்கப்படுகிறது. தேனாம்பேட்டை நிகழ்ச்சியில் இத் திட்டத்தையும் தொடங்கிவைத்த கருணாநிதி 83 பெண்களுக்கு நிதியுதவியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

தேர்தலில் வென்ற கையோடு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றத்தொடங்கிவிட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் நான் போட்ட முதல் கையெழுத்தேஅரிசியை 2 ரூபாய்ககு வழங்குவது தான்.

அடுத்த கையெழுத்தால் ரூ. 7,000 கோடி மதிப்பிலான விவசாயிகளின் கூட்டுறவுக்கடன்களை ரத்து செய்தோம்.

ஊராட்சிகள், நகராட்சிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். பலமாநகராட்சிகளில் மேயர்கள் இல்லை. சென்னையில் இருப்பவர் மேயரா, துணைமேயரா என்றே தெரியவில்லை.

உள்ளாட்சிகள் சிறப்பாக செயல்பட்டால் தான் நல்லாட்சி வழங்க முடியும்.

பலரது கிண்டல்களை பொய்யாக்கிவிட்டுத் தான் அரிசியை கிலோ ரூ. 2க்குத்தருகிறோம். இந்தத் திட்டத்தால் நம் பொருளாதாரம் சீரழியும் என்று சொன்னவர்கள்கூட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டார்கள்.

இந்தத் திட்டம் தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் தான பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தையேதந்தார். உலகுக்கு ஒரு தெரசா போல தமிழ்நாட்டு தெரசாவாக திகழ்ந்தவர் மூவலூர்அம்மையார்.

அவரது பெயரால் கொண்டு வரப்பட்ட ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். மூவலூர் அம்மையார் பற்றி தெரியாததாலோஅல்லது பெண்களுக்கு திருமணம் நிச்சயம் இல்லை என்று நினைத்தாலோ அதைநிறுத்திவிட்டார்கள்.

இந்தத் திட்டம் மீண்டும் இப்போது அமலுக்கு வருகிறது. அதுவும் கூடுதலான நிதிஉதவியோடு. கடந்த முறை ரூ. 10,000 தந்தோம். அதை இப்போது ரூ. 15,000 ஆகஉயர்த்தியிருக்கிறோம்

ஏழைப் பெண்கள் வாழ்வில் விளக்கு ஏற்றும் திட்டம் இது. இதற்கு எவ்வளவு நிதிதேவைப்பட்டாலும் அதைத் தந்து உதவுவோம்.

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், கலர் டிவி வழங்கும் திட்டங்களும்விரைவில் படிப்படியாக அமலுக்கு வரும். இவை மட்டுமல்ல மேலும் பல புதியதிட்டங்களையும் கொண்டு வருவோம் என்றார்.

முன்னதாக கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள்,

2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தினால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது, அதற்கு மத்திய அரசு உதவாது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியிருப்பது குறித்து கேட்டனர்.

அதற்கு கருணாநிதி, 2 ரூபாய் அரிசியால் ஏற்படும் அனைத்து இழப்புகளையும்தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்றார்.

மத்திய அரசிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டபோது, நட்பை,உறவை, ஆதரவை இவற்றைத்தான் எதிர்பார்க்கிறோம்.

நாளை டெல்லி செல்லவுள்ளேன். அப்போது தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்துபிரதமர் உள்ளிட்டோருடன் பேசவுள்ளேன் என்றார்.

இன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில், கண்ணகிசிலையை கருணாநிதி மீண்டும் திறந்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+