ஆட்சி நீடிக்கனுமா?..காங் டென்ஷன் போஸ்டர்
கோவை:
திமுக அரசு ஐந்து ஆண்டு காலம் தனது ஆட்சியைப் பூர்த்தி செய்ய வேண்டும்என்றால் காங்கிரஸுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கோவை நகரின்பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த காங்கிரஸ்கட்சியின் சுவரொட்டிகளால்திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சியில் கட்டாயம் பங்கு தந்தே ஆக வேண்டும் என்று தமிழக காங்கிரஸார்கோரி வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம்நிறைவேற்றி கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் ஆட்சியில் பங்கு கேட்டு ஆங்காங்கே காங்கிரஸார் கோரிக்கைபோராட்டங்கள், சுவரொட்டிகளை ஒட்டி கட்சி மேலிடத்தை நிர்பந்தப்படுத்திவருகின்றனர்.
கோவையில் மிரட்டலுடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகள் காங்கிரஸ்கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டியில், மத்தியிலும் கூட்டாட்சி, மாநிலத்திலும் கூட்டணிஆட்சி, கலைஞரே, 5 ஆண்டு கால அரியணை தொடர, ஆட்சியில் பங்களிப்பீர் என்றுகூறப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்தான் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாககூறப்படுகிறது. கோவை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்தசுவரொட்டிகளால் திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்துக்கு உதவ நல்ல முடிவு- ப.சி
தமிழகத்திற்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து பிரதமருடன் பேசி நல்ல முடிவுஎடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளகருணாநிதியை இன்று காலை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்றுசந்தித்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் வெளியில் வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதைநிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். சந்திப்பின்போது, தமிழகத்தில்விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு மத்திய அரசுஉதவுவது குறித்து பரிசீலிக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
மேலும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தோம். திட்டக்குழுத் துணைத் தலைவர் அலுவாலியாவையும் கருணாநிதி சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர் எந்த வகையில் உதவுவது, எந்த இனங்களில் தமிழகத்திற்கு உதவமுடியும் என்பது குறித்து பிரதமருடன் கலந்து பேசி நல்ல முடிவாக எடுக்கப்படும்என்று கூறினார் ப.சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications