ராகுல் மகாஜன் விவகாரத்தில் உண்மையை மறைக்கமுயற்சி: சிக்கலில் அப்பல்லோ
டெல்லி:
ராகுல் மகாஜன், அவரது உதவியாளர் விவேக் மொய்த்ரா ஆகியோர் கொகைன் என்று நினைத்து ஹெராயினைநுகர்ந்தது உறுதியாகிவிட்டது.
ராகுல் போதை மருந்தை உட்கொள்ளவிலை என்று முதலில் சொன்ன அப்பல்லோ மருத்துவமனை இப்போதுபல்டி அடித்துள்ளது. அவரது உடலில் ஹெராயின் இருந்தது உறுதியாகியுள்ளது அந்த மருத்துவமனை இப்போதுகூறியுள்ளது.இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்பல்லோவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், மொய்ராவுக்கு மிக நெருக்கமான காஷ்மீரைச் சேர்ந்த ஷாகில் தான் போதைமருந்தை 3 நைஜீரிய இளைஞர்களிடம் இருந்து வாங்கி வந்து தந்துள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. போதைமருந்து விற்பனையாளரான ஷாகிலுக்கு மொய்தா மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
மும்பையில் சிறிது காலம் வசித்துவிட்டு பின்னர் டெல்லிக்கு இடம் மாறிய ஷாகில், நைஜீரிய நாட்டினரிடம்இருந்து போதை மருந்தை வாங்கி விற்று வந்துள்ளார்.
முழு போதையில் இருந்த ராகுல் மகாஜனும் மொய்தாராவும் ஷாகில் வாங்கி வந்த ஹெராயினை பாத்ரூமில்வைத்து இழுத்துள்ளர்.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ராகுல் போதை மருந்தைஉட்கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் விசாரணை தீவிரமான நிலையில், ஷாகில்மற்றும் மற்ற 3 பேர் தந்த வாக்குமூலங்களும் போதை மருந்தை உண்ட பின்னரே ராகுலும் மொய்த்ராவும்மயங்கியது உறுதியானது.
மேலும் மகாஜனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 2 பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். அவைசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து ராகுலின் உடலில் போதை மருந்து இருந்தது என்றுஅப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர் அனுபம் சிபல் பல்டி அடித்து அறிக்கை விட்டுள்ளார்.
ராகுலின் சிறுநீரில் போதை மருந்து உட்கொண்டதற்கான ஆதாரம் இருந்ததாக அப்பல்லோ இப்போதுகூறியுள்ளது.
ராகுலின் போதை விவகாரத்தை மறைக்க அப்பல்லோ ஏன் முயன்றது? அவர்களை யார் வளைக்க முயன்றதுஎன்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன. இதையடுத்து அந்த மருத்துவமனையின் அதிகாரிகளையும்மருத்துவர்களையும் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.
மேலும் ராகுல் நல்லபடியாக உடல் நலம் தேறி வருவதாகவும் தனது குடும்பத்தினருடன் பேசுவதாகவும் மெடிக்கல்புல்லட்டின் வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை, போலீசார் ராகுலை விசாரிக்கச் சென்றபோது அவர் பேசும்நிலையில் இல்லை என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டது.
இதனால் அப்பல்லோ மீதான சந்தேகம் மேலும் வலுவாகியுள்ளது.
ராகுலும் மொய்த்ராவும் வாங்கி அடித்த போதை மருந்து ஹெராயின் மற்றும் பல போதை மருந்துகள் கலந்த ஒருகாக்டெயில் போதை மருந்து என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே போதை மருந்தை வாங்கி வந்து தந்த ஷாகில் 8 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.இவர் போதை மருந்து வாங்கிய 3 நைஜீரிய இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராம் ரூ. 3,000 என்ற வீதத்தில் 5 கிராம் போதை மருந்தை ரூ. 15,000ம் வாங்கிக் கொண்டு ஷாகிலிடம்தந்துள்ளனர் இந்த நைஜீரியர்கள்.
இதற்கிடையே ராகுல் மகாஜன் தவறு செய்துவிட்டதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அவர் ஒருஇளைஞர். இளைஞர்கள் தவறு செய்வது வழக்கம் தான். அவருக்கு பாஜக உதவ வேண்டும் என்றார்.
ஆனால், கட்சியின் பெயரை ராகுல் நாறடித்துவிட்டதால் அவரிடம் இருந்து விலகி இருக்கவே பாஜகவின்பெரும்பாலான தலைவர்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications