ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு இல்லை: கருணாநிதி
டெல்லி:
காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆட்சியில் பங்கு கிடையாது. ஆட்சியைப் பங்கு போட்டுக்கொள்ள மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைசந்தித்தார்.
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
![]() |
புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுககூறியுள்ளது, அதன்படி ஆதரவு கொடுத்து வருகிறோம். அதேபோல தமிழகத்தில்திமுக ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.வழங்கியும் வருகிறது. இந்த நிலைகளில் மாற்றம் ஏதும் இல்லை.
தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க மாட்டோம். அதேபோலபுதுவை ஆட்சியில் பங்கு கேட்கவும் மாட்டோம். சோனியாவுடன் பேசும்போது இந்தவிவகாரம் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை.
திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி ஆட்சிகிடையாது என்பதை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் பேசி முடித்துவிட்டோம் என்றார் கருணாநிதி.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசியபோது,சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், டெல்லியில் உள்ளதைப் போலசென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம், குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம்செய்யும் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அமலாக்குவது குறித்துப் பேசினார்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுசெய்ய வேண்டும் என்று அப்போது பிரமதரிடம் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.
பின்னர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் இல்லத்துக்குச் சென்ற கருணாநிதி அங்குஅவரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து கருணாநிதியை ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மார்க்சிஸ்ட் தலைவர்பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பர்தன், ராஜா ஆகியோர் சந்தித்துப்பேசினர்.
பின்னர் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தை கருணாநிதி சந்தித்துப்பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
முன்பு நான் மூன்று முறை முதல்வராக இருந்தபோது, முழுமையானபதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. நான்காவது முறை மட்டுமே நான்முழுமையாக பதவி வகித்தேன்.
இன்றைக்கு இருப்பவர்கள் நாளைக்கு இருப்பார்கள் என்று கூற முடியாது. எனதுநெருங்கிய நண்பர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் திடீரென இறந்து போனார்.வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை.
எனது அரசு சிறுபான்மை அரசு என்று கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன்.இதுதொடர்பாக ஜெயலலிதா சொல்வதை பத்திரிக்கைகள் வெளியிடக் கூடாது.வாஜ்பாய் தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றபோது அதுசிறுபான்மை அரசாக இல்லையா? ஜெயலலிதாவின் ஆதரவுக் கடிதத்தை எதிர்பார்த்துவாஜ்பாய் காத்திருக்கவில்லையா?
எனது அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் எந்த சவாலையும் சந்திக்க நான்தயாராகவே உள்ளேன். எனது அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்றுகவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டுள்ளேன் என்றார் கருணாநிதி.
ஆட்சியில் பங்கில்லை என்ற கருணாநிதியின் திட்டவட்ட அறிவிப்பால் தமிழகத்தில்உள்ள காங்கிரஸ் கட்சியின் அனைத்து கோஷ்டிகளும் பெரும் ஏமாற்றமும்,அதிருப்தியும் அடைந்துள்ளன.
அதேசமயம், காங்கிரஸ் மேலிடம் கருணாநிதியின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாகஎதையும் தெரிவிக்கவில்லை.
மாண்டேக் சிங்குடன் சந்திப்பு:இந் நிலையில் இன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங்அலுவாலியாவுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இச் சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர்திரிபாதி, நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி, இந்த ஆண்டுக்கான மத்திய நிதிஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடந்தது.













Click it and Unblock the Notifications