பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு!
சென்னை:
பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் மதிமுக போட்டியிடும்இடங்கள் குறித்த விவரங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் 24ம் தேதி நடக்கவுள்ளது.அதிக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாண்டிச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்கட்சியைத் தவிர மற்ற கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவைஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பகிர்வு தொடர்பாக அதிமுக குழு பேச்சு நடத்திஅதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் விவரங்களை ஜெயலலிதாவெளியிட்டுள்ளார்.
அதன்படி பாண்டிச்சேரி, உழவர்கரை, காரைக்கால் ஆகிய 3 நகராட்சித் தலைவர்பதவிக்கும் அதிமுக போட்டியிடுகிறது. புதுவை நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 42இடங்களில் அதிமுக 31 கவுன்சிலர் பதவிக்கும், மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 5பதவிக்கும் போட்டியிடும்.
உழவர்கரை நகராட்சியில் உள்ள 37 கவுன்சிலர் பதவிக்கு அதிமுக 26லிலும், மதிமுக6, விடுத்லைச் சிறுத்தைகள் 6 இடங்களிலும் போட்டியிடும்.
காரைக்கால் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அதிமுக 12, மதிமுக 4, விடுதலைச்சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிடவுள்ளன.












Click it and Unblock the Notifications