ஸ்டாலின் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை:
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 திமுகவினர் மீதானவழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு,டெஸ்மா, எஸ்மா சட்டத்தின் கீழான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும்வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.அதன்படி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மீதான டெஸ்மா சட்ட வழக்குகள்முதலில் வாபஸ் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7திமுகவினர் மீதான ராணி மேரிக் கல்லூரி இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்குகள்வாபஸ் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு சென்னை ராணி மேரிக் கல்லூரியை இடிக்க தமிழக அரசுமுடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பெரும் போராட்டம்நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி வளாகத்திற்குள்சென்று மாணவிகளிடம் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பேசினர்.
இதையடுத்து ஸ்டாலின், பொன்முடி, தண்டாரம்பட்டு வேலு, ஜெ. அன்பழகன்,பரணிகுமார், புகழேந்தி உள்ளிட்ட 7 திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் 13வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது குற்றச் செயலில் ஈடுபடுதல், அத்துமீறிநுழைதல், அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமிநீதிபதி ராமநாதன் முன்பு ஆஜராகி தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ராமநாதன், வாபஸ் பெறும் முடிவை ஏற்றுக்கொண்டு வழக்குகளை பைசல் செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications