சென்னையில் பயங்கர தீ: பல லட்சம் சேதம்!
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில்30க்கும் மேறபட்ட குடிசைகள் தீயில் கருகின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்சேதமடைந்தன.
நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்குசில கட்டட வீடுகளும் உள்ளன. அந்த வீடுகளின் மாடிகளிலும் கூட குடிசைகள்போடப்பட்டு பலர் குடியிருந்து வருகின்றனர்.இப்பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் தனது வீட்டு மாடியில் 3 குடிசைகளைபோட்டு அதை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த குடிசைகளில் ஒன்றில் இன்று காலைவிறகு எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீவெளியில் பரவி குடிசையில் பற்றியது.
காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து குடிசைகளுக்கும் பரவிஅப்பகுதியில் உள்ள குடிசை வீடுகள் எரியத் தொடங்கின. அந்தத் தெரு தவிரஅருகில் உள்ள தெருவிலும் தீ பரவி, இரு தெருக்களிலும் உள்ள 30க்கும் மேற்பட்டகுடிசைகள் எரிந்தன.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் தீயைஅமைத்தனர். அதற்குள் இரு தெருக்களிலும் உளள குடிசைகள் மொத்தமாக எரிந்துபோய் விட்டன.
தங்க நகைகள், பணம், டிவி , துணிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் தீயில் கருகி விட்டன. பத்தாவது மற்றும் பிளஸ்டூ படித்த மாணவர்கள்பலரின் சான்றிதழ்களும் இதில் எரிந்து விட்டதால் அவர்கள் மிகுந்தஅதிர்ச்சிக்குள்ளாகினர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்,சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா உள்ளிட்டோர் விரைந்து வந்துபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications