ஜாக்கிரதை.. சென்னையில் பரவுது மெட்ராஸ் ஐ!
சென்னை:
மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் கண் நோய் சென்னை நகரில் மிக வேகமாகப் பரவிவருகிறது.
கெராட்டிடிஸ் என்ற வைரஸால் பரவும் கண் நோய் சென்னையில் ரொம்பவும்பாப்புலர். வெப்ப நகரமான சென்னையில்தான் இந்த நோய் பாதிப்பு எப்பவும் அதிகம்என்பதால் இந்த நோய்க்கு மெட்ராஸ் ஐ என்று செல்லப் பெயர் சூட்டி விட்டார்கள்.இப்போது சென்னை நகரில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது. ஆனால்வழக்கமான கண் நோய் போல இல்லாமல் இந்த நோய் சற்று கடுமையாக இருப்பதால்பொது மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
கண்ணின் கரும்படலமான கார்னியாவில் முதலில் வெள்ளை நிறத்திலான புள்ளிகள்தோன்றும். இதை கண்டவுடன் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.தவறினால் பல்வேறு கண் பாதிப்புகளை இது ஏற்படுத்தி விடும், கண் பார்வைஇழப்புக்கும் இது சில நேரம் செல்வதுண்டு.
சென்னை அரசு கண் நோய் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐநோய் பாதிப்பு ஏற்பட்ட பலர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக மருத்துவமனையின்கண்காணிப்பாளர் இயக்குனரான டாக்டர் வேலாயுதம் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தினசரி 20 பேராவது இங்கு கண் நோய் பாதிப்பு காரணமாகசிகிச்சைக்கு வருகிறார்கள். இது வழக்கத்தை விட அதிகமானது என்பதால் மெட்ராஸ்ஐ பரவி வருவது உறுதியாகியுள்ளது.
மெட்ராஸ் ஐயின் சில அறிகுறிகள்:
கண்ணில் எரிச்சல் ஏற்படும், தண்ணீர் கொட்டும், கரும்படலத்தில் வெண்புள்ளிகள்காணப்படும். கண்ணில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாககண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண் நோய் ஏற்பட்டவர்களை மற்றவர்களுடன் சேராமல் தனித்து இருக்க வைக்கவேண்டும். சுயமாக மருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் முறையான மருத்துவரைஅணுகி சிகிச்சை பெறுவதே நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications