நகை கடையில் கொள்ளை: 2 கல்லூரி மாணவர்கள் பிடிபட்டனர்
சென்னை:
கல்விக் கட்டணம் செலுத்த வீட்டில் கொடுக்க பணத்தை ஜாலியாக செலவு செய்துவிட்ட இரு மாணவர்கள்,கல்லூரிக் கட்டணத்துக்காக நகைக் கடையில் கொள்ளையத்துவிட்டுத் தப்பியோடிய போது பிடிபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை அருகே குமரன் நகரில் ஜோகன் கிஷோர் என்பவர் உஷா ஜூவல்லரி என்றநகைக்கடையை நடத்தி வருகிறார். இங்கு இரு இளைஞர்கள் ந்தனர். செயின் வாங்க வேண்டும் என்று சொல்லி,மாடல்களை காண்பிக்குமாறு கேட்டனர். இதையடுத்து கிஷோர் சில செயின் மாடல்களை எடுத்து காட்டினர்.செயின்களை பார்த்து கொண்டு இருந்து இளைஞர்கள் திடீரென மூன்றரை பவுன் நகையை எடுத்துகொண்டுவெளியே ஓடினர். இதை எதிர்பார்க்காத கிஷோர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டுக்கொண்டே அவர்கள்பின்னால் ஓடினார்.
கடைக்கு வெளியில் அவர்களது நண்பன் ஒருவன் ஹெல்மட் அணிந்து பைக்கில் தயாராக நின்றுகொண்டிருந்தான். வெளியே வந்த இருவரும் பைக்கில் ஏறி தப்பி ஓடினர். ஆனால் பொதுமக்கள் அவர்களைவிரட்டிச் சென்றனர். அதில் ஒருவன் சிக்கினான். மற்ற இருவரும் தப்பிவிட்டனர்.
பிடிபட்டவனிடன் விசாரித்த போது அவன் பெயர் வேணுகோபால் (20), அவன் கல்லூரி மாணவன் என்றும்தெரிந்தது. பின்னர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வேணுகோபால், நான் விருகம்பாக்கத்தில் வசிக்கிறேன். மதுரவாயலில் உள்ள தாய் மூகாம்பிகைபாலிடெக்னிக்கில் படிக்கிறேன். இரண்டு ஆண்டு தேர்வு எழுதி முடித்து விட்டேன். 3 ஆண்டுக்கான கல்விதொகை ரூ. 10 ,000த்தை எனது அப்பா என்னிடம் கொடுத்தார். அதை நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்துவிட்டேன்.
என்னுடன் படிக்கும் பாலகணேசும் (20) என்னைப்போலவே வீட்டில் கொடுத்த ரூ. 10,000த்தை செலவு செய்துவிட்டான். இதனால் கல்லூரி பணம் கட்ட என்ன செய்யலாம் என்று கடந்த ஒரு வாரமாக யோசித்தோம்.
அப்போது தான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடைச் சேர்ந்த அருளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவன் கூலிவேலை செய்பவன். அவன் புதிதாக பைக் வாங்கி விட்டு, அதற்கு மாதம் தோறும் தவணை கட்ட முடியாமல்கஷ்டப்பட்டான்.
ஒரு நாள் மூவரும் சேர்ந்த நகை கடையில் கொள்ளையடித்தால் போதும், பணப் பிரச்னையெல்லாம் தீர்ந்துபோகும் என்று நினைத்தோம். திரைப் படத்தில் கொள்ளையடித்து போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல்தப்பிக்கின்றனர். அதை போல நாமும் செய்தால் என்ன? என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகொள்ளையடிக்க பாலகணேஷின் வீட்டருகே உள்ள உஷா ஜூவல்லரியில் கொள்ளையடிக்க திட்டம்போட்டோம்.
பாலகணேஷ் வந்தால் அடையாளம் தெரிந்து விடும் என்பதற்காக அவனை பைக்கில் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு வெளியே நின்றான். நானும் அருளும் கடைக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றோம். ஆனால்மாட்டிக் கொள்வோம் என்று நாங்கள் நினைக்கவில்லை.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
வேணுகோபால் கொடுத்த தகவலின் பேரில் அருளை போலீசார் கைது செய்தனர். பின்பு அவரது பைக்கையும்பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகிவிட்ட பால கணேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications