டீசல் விற்பனை வரி குறைப்பு கண் துடைப்பு-ஜெ
சென்னை:
டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்திருப்பதாக திமுக அரசு அறிவித்திருப்பதுவெறும் கண் துடைப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில்ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக அறிவித்தது. தமிழகத்தில் உள்ளஅனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுவை, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திராஆகிய மாநிலங்களிலும் இந்தப் போராட்டத்தில் அதிமுக இன்று ஈடுபட்டது.சென்னை பூங்காநகர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஜெயலலிதாதலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வைகோ, திருமாவளவன், ஜி.காளன்,ஸ்ரீதர் வாண்டையார், தாவூத் மியாகான், பஷீர் அகமது, சந்தானம் உள்ளிட்டகூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், மத்திய அரசுக்கு எதிராக இந்தபோராட்டம் நடந்து கொண்டுள்ள நிலையில் டீசல் மீதான விற்பனை வரியைக்குறைத்திருப்பதாக திமுக அரசு அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்புஅறிவிப்பாகும்.
நான் எப்போதுமே சொல்வது என்னவென்றால் மக்களுக்கும், மத்திய அரசுக்கும்நேரடித் தொடர்பு இல்லை. மாநில அரசுக்குத்தான் மக்களுடன் நேரடித் தொடர்புஉள்ளது. ஆனால் இப்போது மாநில அரசில் இருப்பவர்கள்தான் மத்திய அரசிலும்பங்கு வகிக்கிறார்கள். எனவே மாநிலத்திலும், மக்களுக்கும், அரசுக்கும் தொடர்புஇல்லாத நிலை உருவாகி உள்ளது.
கடந்த 24 மாதங்களில் தங்போதைய காங்கிரஸ், திமுக தலைமையிலான மத்திய அரசு6 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டது. மக்கள் மீது தாங்க முடியாதசுமையை ஏற்றியுள்ளது. பாரதப் பிரதமர் வெளிநாட்டில் படித்தவர். மாண்புமிகு நிதிஅமைச்சர் அவரும் வெளிநாட்டில் படித்தவர். திட்டக் குழுத் துணைத் தலைவர்,அவரும் வெளிநாட்டில் படித்தவர். இவர்கள் எல்லாம் பொருளாதார மேதைகள்.
அனைவரும் வெளிநாட்டில் படித்தவர்கள் என்பதால்தான் நமது நாட்டுப்பொருளாதாரம் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. ஏழை, எளிய மக்களின்நிலை அவர்களுக்குப் புரியவில்லை.
அத்தனை பேரும் நீட்டி, முழக்கி தத்துவங்களைக் கூறுகிறார்கள். அன்றாடம் மக்கள்படுகின்ற கஷ்டங்கள் அவர்களுக்குத் தெரிந்தபாடில்லை. ஐந்து முறை பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் கடுமையான எதிர்ப்பை,கண்டனத்தை நாம் தெரிவித்தோம். அந்த சுமையையே மக்களால் தாங்கமுடியவில்லை.
இந் நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத் திட்டமிட்டு,மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் பதுங்கியிருந்து, தேர்தல்முடிந்தவுடன் மக்கள் மீது பாய்ந்திருக்கிறார்கள். இதுதான் மக்களைக் காக்கிறலட்சணமா? என்றார் ஜெயலலிதா.
பின்னர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைகளைகோர்த்து தங்களது எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தினர். அதன் பின்னர்கண்டன கோஷங்களை ஜெயலலிதா வாசிக்க அதை தலைவர்களும், கூடியிருந்ததொண்டர்களும் திருப்பிக் கூறி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைதொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி சார்பில் நடக்கும் முதல்போராட்டம் இது என்பதால் பெரும் கூட்டத்தைக் அதிமுக கூட்டணிக் கட்சிகள்கூட்டின. இதனால் அந்தப் பகுதியே ஜனக் கடலில் மிதந்தது. இதனால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. வட சென்னை இணை ஆணையர் ரவி தலைமையில் 3 துணைஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள், 500க்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதே போல மதுரையில் நடைபெற்ற போராட்டத்திற்கு காளிமுத்துவும், தேனியில்நடந்த போராட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வமும் தலைமை தாங்கினர்.
போராட்டம்-வாஜ்பாய், அத்வானி கைது:
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் இன்று போராட்டம் நடத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மற்றும் அத்வானிஉள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications