அதிமுக எம்.எல்.ஏ. மீது கல்வீசி தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சின்னச்சாமி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

மருங்காபுரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சின்னச்சாமி தொகுதி மக்களுக்கு நன்றிதெரிவிக்க மருங்காபுரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களுக்கு கட்சியினருடன்சென்றார்.

மணப்பாறை அருகே வையம்பட்டி இந்திரா நகரில் திறந்த ஜீப்பில் அவர்வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தவாறு வந்தார் அப்போது திமுகவைச் சேர்ந்த ரவிஎன்ற ரவிச்சந்திரன் தலைமையில் சிலர் அங்கு வந்து இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்என்று கேட்டு தகராறு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சின்னச்சாமியுடன் வந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இது பின்னர் கை கலப்பாக மாறியது.திமுகவினர் சின்னச்சாமி மற்றும் அதிமுகவினரை கல்வீசித் தாக்கினர். இதில்சின்னச்சாமி மீது கற்கள் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வையம்பட்டி போலீஸார் விரைந்து வந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகச் செய்தனர். எம்.எல்.ஏ.வை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.போலீஸாரிடம், என்னைக் கொலை செய்ய சதி நடந்துள்ளது. இதுதொடர்பாகரவிச்சந்திரனைக் கைது செய்ய வேண்டும் என்று புகார் கூறினார்.

ஆனால் போலீஸார் ரவிசந்திரனை கைது செய்யவில்லை. மாறாக அவரது உறவினர்சரவணன் என்பவரை மட்டும் பிடித்துச் சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் சின்னச்சாமி தலைமையில் காவல்நிலையம் முன்பு கூடி மறியல் செய்தனர். மணப்பாறை டி.எஸ்.பி. உள்ளிட்டோர்சின்னச்சாமியிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன், சரவணன் ஆகியோர் மீது தகாத முறையில் பேசியது,கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுகவினர் மறியலைக் கைவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+