பழத்தை உரிச்சு குடுத்தாச்சு, அப்புறம் என்ன?-ஜெ
சென்னை:
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் திமுக அரசு டிராமா போடுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதுகாங்கிரஸ் கட்சி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதி கொடுக்க மத்தியஅரசு முன்வந்ததாகவும், அதை எனது தலைமையிலான முந்தைய தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்றும்கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதி கொடுக்கப்போவதாக தெரிவித்தாரேதவிர, நிதி எதுவும் கொடுக்கவில்லை. பீட்டர் அன்போன்சும், பிற காங்கிரஸ்காரர்களும் மத்திய அரசு நிதிகொடுக்க முன்வந்ததாக கூறுவது முற்றிலும் தவறான செய்தியாகும்.
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மத்திய அரசின் நிதி உதவியைஎதிர்பார்க்காமல், அதற்காக காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், நானே முயற்சி எடுத்து எனது அரசு ஒருதிட்டம் வகுத்து அதற்கு உலக அளவிலான டெண்டர் கோரி, ஒரு நிறுவனத்துடன் மெட்ரோ வாட்டர் நிறுவனம்ஒப்பந்தமும் செய்து, முழு செலவையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டு அந்த திட்டத்தை நிறைவேற்றி தரஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட அந்த நவீன ஆலைத் திட்டத்திற்கானசெயலாக்க நடவடிக்கை கடந்த ஆண்டு 13.9.2006 அன்று என் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
எனது அரசு மேற்கொண்ட முயற்சிகளால் இந்த திட்டம் சாத்தியமாயிற்று. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (ஜவிஆர்சிஎல்) இன்பராஸ்ட்ரக்சர் அண்ட் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் என்றநிறுவனத்துடன் தண்ணீர் மொத்த கொள்முதல் தொடர்பாக ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது.
அதை அடுத்து இத்திட்டம் உடனடியாக தொடங்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவும், இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியதிட்டம் என்று பரிந்துரை செய்தது.
ஆனாலும், கடல் நீரைக் குடிநீராக்கும் இந்த மகத்தான திட்டம் செயல்படுவது தாமதமாகி வந்தது. என்னகாரணம்? இத்திட்டம் செயல்படுத்தப்பட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரின் கையொப்பம்தேவை. அந்த கையொப்பம் இன்று வரை இடப்படவே இல்லை.
திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரைப்படி திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ராஜா இந்தத்திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்து இடவில்லை.
இந்த திட்டம் செயல்படுத்தப்படாதற்கு இதுதான் காரணம். இதனைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே, நான் பலமுறை தெரிவித்திருக்கிறேன்.
எனது முந்தைய ஆட்சியின்போது, 1993ம் ஆண்டில் உலக வங்கி நிதி உதவியுடன் வீராணம் திட்டத்தைசெயல்படுத்த நான் முனைந்தேன். அதனை அதற்கு பின் 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கிடப்பில்போட்டது.
திரும்பவும் 2001ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் புதிய வீராணம் திட்டம் வெற்றிகரமாகநிறைவேற்றப்பட்டு, அதன் பலனை இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் பெற்று வருகிறார்கள்.
அதுபோல் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் நான் தயார் செய்து தந்திருக்கின்ற திட்டம் தான். மத்திய திமுகஅமைச்சர் ராஜா கையெழுத்துப் போட்டிருந்தால் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய திட்டம் அந்தத்திட்டம்.
ஆனால் மைனாரிட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதி 9.6.2006 அன்று அளித்த பேட்டியில் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டம் எந்த அளவுக்கு உள்ளது? என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கையில், கடலில் நீர்இருக்கிறது. குடத்துக்கு வரவில்லை. அதற்கான முயற்சி எடுத்து வருகிறேன் என்று மழுப்பாலாகப்பசப்பியிருக்கிறார்.
அவ்வாறு கருணாநிதி முயற்சி எடுப்பதற்கு எந்த தேவையும் இல்லையே? ஏற்கெனவே தயாரான திட்டம் தானேஇது. பழத்தை உரித்துக் கொடுத்திருக்கிறோம். அதை சாப்பிட வேண்டியது தான் பாக்கி. ஆனால் பழம் தரும்மரத்தையே இனிமேல் தான் நட வேண்டி உள்ளது என்பது போல் பாசாங்கு செய்கிறார் திமுக தலைவர்கருணாநிதி.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எல்லா முயற்சிகளும் ஏற்கனவே என்னால் எடுக்கப்பட்டு விட்டன. இனிமுயற்சி எடுப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி சொல்லுவது ஏமாற்று வேலை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை மாநகர மக்களின் நலனை கருதி கருணாநிதி இதற்கான கோப்பில் திமுக மத்திய அமைச்சர் ராஜாவைகையெழுத்திட சொல்லி எனது அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை உடனடியாக தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications