விஜயகாந்த், காங் கூட்டு-நெல்லை கண்ணன் ஐடியா
மதுரை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிஅமைக்க வேண்டும் என்று பிரபல அரசியல் பேச்சாளர் நெல்லை கண்ணன்கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன், தேர்தலுக்க முன்பாக அதிமுகவுக்குஆதரவு தெரிவித்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். தமிழகம் முழுவதும் சென்றுஅதிமுகவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டுள்ளார். அந்தக்கடிதத்தில், கூட்டணியால்தான் பெரும்பான்மை என்பதை தெரிந்த பிறகும் கூட,மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தனித்தே ஆட்சி அமைப்போம் என்றார்.
இதை விட காங்கிரஸுக்கு என்ன அவமானம் வேண்டும்? ஓரிரு காங்கிரஸ்காரர்கள்அமைச்சர்களாக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் வந்த அவமானங்களைப்பார்த்தீர்களா?
காங்கிரஸை ஆட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கருணாநிதியும்டெல்லியில் மிகத் தெளிவாக சொல்லி விட்டார்.
தேர்தலுக்கு முன்பாகவே இதுதொடர்பாக சோனியாவிடம் பேசி முடிவெடுத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசைஇல்லை என்று அவர் கூறுவது, டெல்லியை மிரட்டுவதற்குத்தான் என்பதுஉங்களுக்குப் புரியவில்லையா?
பதவிக்கு ஆசைப்படும் காங்கிரஸ் நண்பர்கள், கருணாநிதியை காமராஜர் என்று கூடசொல்கிறார்கள். அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கசொல்லுங்கள். பிறகு கருணாநிதி பேச முடியுமா.
காங்கிரஸை கருணாநிதியிடம் ஒப்படைத்து நீண்ட நாட்களாகி விட்டது. லோக்சபாதேர்தலில் புதுவையை பாமகவுக்குத் தந்தார். தென்காசியை இந்திய கம்யூனிஸ்டுக்குத்தந்தார். நாகர்கோவிலை மார்க்சிஸ்ட்டுக்குத் தந்தார்.
அதைச் சூழ்ச்சி என்று நான் சொன்னால் கருணாநிதியின் காங்கிரஸ்காரர்கள்வருத்தப்படுவார்கள். டெல்லி மேலிடம் அதுகுறித்துக் கவலைப்படவில்லை.
சோனியா கலந்து கொள்ளும் விழாக்களில் பிரணாப் முகர்ஜியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தயாநிதி மாறன் முன்னால் நிற்கிறார். இங்கு காங்கிரஸ்காரர்கள் யாராவதுஅவரை தள்ளி விட்டு விட்டு கருணாநிதி பக்கத்தில் நிற்க முடியுமா? இதை ஏன்யாரும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்?
கண்ணம்மா படம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்க முடியுமா? அதற்கு ஏற்பாடுசெய்வீர்களா? உள்ளாட்சித் தேர்தலிலாவது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளைக் கேட்டுப்பெறுவீர்களா?
பேசாமல் திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிஅமைக்க முன்வாருங்கள். எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் இன்னும்காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுகிறார்களே அவர்களின் கேள்விக்கு பதில்சொல்லுங்கள்.
நீங்கள் உண்மையான காங்கிரஸ்காரர் என்பதால் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். ஆனால்இதற்குக் கூட டெல்லியை கேட்க வேண்டியிருக்கே என்ற கவலைதான் எனக்கும் என்று கூறியுள்ளார் நெல்லைகண்ணன்.












Click it and Unblock the Notifications