அமைச்சர் ஸ்டாலினை கத்தியால் குத்த முயற்சி!
மதுரை:
மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை கத்தியால் குத்த முயற்சிநடந்தது.
ஸ்டாலின் இன்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை வந்தார். அவரைவரவேற்க ஏராளமான திமுகவினர் ரயில் நிலையத்தில் கூடியிருந்தனர். அப்போது ஒருநபர் ஸ்டாலினின் பின் பக்கமாக வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்தார்.
![]() |
இதைப் பார்த்த ஸ்டாலினின் பாதுகாவலர் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையின் கமாண்டோ) அந்த நபரைத் தள்ளிவிட்டார். கத்தியையும் பறித்துவிட்டுஅவரைப் பிடிக்க முயன்றார். ஆனால், அந்த மர்ம நபர் கத்தியைத் தூக்கி வீசிவிட்டுரயில் நிலையத்தில் இருந்து கூட்டத்தில் கலந்து ஓடி தப்பிவிட்டார்.
இதனால் ரயில் நிலையத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் கூறுகையில், அமைச்சர்ஸ்டாலினுக்கு அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை வீரர் சுரேஷ்குமார், அந்த வாலிபரைப் பிடித்து கையில் வைத்திருந்த கத்தியைப்பிடுங்கினார். அப்போது சுரேஷ்குமாரின் சுண்டுவிரல், பெருவிரல் மற்றும் ஆள்காட்டிவிரலில் சிறு காயம் ஏற்பட்டது.
அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிஓடி விட்டார். அவர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் திமுகதொண்டர்களோடு நீண்ட நேரமாக காத்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது. அவர்யார் என்பதை கண்டறிய தீவிர நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், மதுரை மாநகரகாவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணைமேற்கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் ஸ்டாலின் மீது கத்தியால் தாக்க ஒருவர்முயன்றுள்ளது திகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக ஸ்டண்ட்: அதிமுக புகார்
இருப்பினும் இது திமுகவினர் அடிக்கும் ஸ்டண்ட் என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு மத்திய இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பைப் பெற திமுகதிட்டமிட்டுள்ளது. இதற்காகவே திமுகவினரே ஒருவரை செட்டப் செய்து கத்தியால்குத்த முயன்றதாக கதை கிளப்பி விட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள்சூழ்ந்துள்ள நிலையில் ஸ்டாலினை தாக்க முயன்றதாக கூறப்படும் நபர் எப்படித்தப்பிப் போக முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications