ஜெ மீதான வருமான வரி வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் குற்றச் சாட்டுக்களைப் பதிவு செய்யலாமா,வேண்டாமா என்பது குறித்து இன்று மாலை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும்,சசிகலாவும் தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது சென்னைபொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குதொடர்ந்தது.இந்த வழக்கின் விசாரணையில் தாமதம் நிலவி வந்ததால், உடனடியாககுற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம மனுவைத் தளளுபடி செய்தது. இதையடுத்துஉச்சநீதிமன்றத்தை வருமான வரித்துறை அணுகியது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து குறித்து4 மாதங்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்குமாறு சென்னை நீதிமன்றத்திற்குஉத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் இரு தரப்புவழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. வாதம் முடிவடைந்து இன்றைக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்யலாமா என்பது குறித்து இன்று மாலை நீதிபதி ராஜ் தீர்ப்பளிக்கவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications