ரெளடிகளை ஒழிக்க படை-ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
தமிழகத்தில் ரவுடிகள், கூலிப்படையினரை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறையில்தனிப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம்ராமதாஸ் பேசுகையில்,போலீஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம்குறைந்துள்ளது. சமூக விரோத செயல்களும் குறைந்து வருகின்றன.
ரவுடிகள், கூலிப் படையினரை ஒழிக்க காவல்துறையில் தனிப் பிரிவு அமைக்கவேண்டும். தனிப் படை அமைத்து இவர்களை வேரறுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். டீசல் விலை மீதான விற்பனை வரியை தமிழக அரசு ரத்து செய்துள்ளதுபாராட்டுக்குரியது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications