இலங்கை தமிழர் நல போராட்டம்-பாமக விலகல்திமுகவை குற்றம் சாட்ட முயற்சி: கருணாநிதி
விழுப்புரம்:
பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில்பாமக பங்கேற்காது என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பழ. நெடுமாறனின் தலைமையில் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுதெரிவித்தும், சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்தும் போராட்டம்நடைபெறுகிறது.இதில் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்வர் என்று நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் சென்னையிலும், மதுரை போராட்டத்தில்வைகோவும் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இப்போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று ராமதாஸ்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்து பழ. நெடுமாறன் தலைமையில்நடக்கும் போராட்டத்தில் சில அரசியல் காரணங்களால் பாமக பங்கேற்காது.
அதே நேரத்தில் இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லஆக்கப்பூர்வமான முயற்சிகளை பாமக எடுத்து வருகிறது. எனவே இப்போராட்டத்தில்நாங்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
கருணாநிதி புகார்:
இதற்கிடையே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களின் முன்னால்திமுகவை குற்றம் சாட்டி நிறுத்தி வைக்க சிலர் முயல்வதாக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடக்க காலம் முதலே மனித நேயம், தமிழ்உணர்வு, தமிழர் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் திமுக செயல்பட்டு வருகிறது.
ஆனால் உலகத் தமிழர்களின் முன்னால் திமுகவை குற்றம் சாட்டி நிறுத்தி வைக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், ஆட்சி பீடத்தில் அமர்ந்து சர்வாதிகாரம்செலுத்த முடியவில்லையே என்பதாலும், சிலர் விஷமப் பிரசாரம் செய்கின்றனர்.
இதுதொடர்பாக திமுகவை களங்கப்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டும்,துண்டுப் பிரசுரங்களை புழக்கத்தில் விட்டும் பித்தலாட்டம் செய்கின்றனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக திமுக, மத்திய அரசுடன் தொடர்புகொண்டும், தோழமைக் கட்சிகளின் துணையுடனும், சுமூகமாக முடிவடையசெயல்படுமே அல்லாமல், குறுக்கு வழி, கோணல் வழியை தேடாது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
ஈழ ஆதரவு பேரணி: திருமா
இந் நிலையில் சென்னையில் ஜூலை மாதம் 8ம் தேதி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுதெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்நடத்தப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களில் இலங்கையிலிருந்துதமிழகத்தை நோக்கி 3,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வந்தவண்ணம்உள்ளனர். எந்த நேரத்திலும் அங்கு கடும் போர் மூளும் என்ற நெருக்கடிஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் ராணுவ வெறியாட்டம், கட்டுப்பாடற்ற முறையில் தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்திய அரசும், தமிழக அரசும் ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில், உடனடியாகத் தலையிட வேண்டியதுஇன்றியமையாததாகும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் நடத்தப்படும்ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது. சென்னையில் நானும்,பிற மாவட்டங்களில் முன்னணி பொறுப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.
ஈழத் தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தியும், இந்திய அரசு உடனடியாக இந்தவிஷயத்தில் தலையிடக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஜூலை 8ம் தேதிசென்னையில் பொதுக் கூட்டமும், பேரணியும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்திருமாவளவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications