இலவச கலர் டிவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவித் திட்டத்தை தடை செய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பாட்சா என்ற 76 வயது ஓய்வு பெற்ற கல்லூரிஆசிரியர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பிறகு திமுக தனது தேர்தல் அறிக்கையில், பொதுமக்களுக்கு கலர்டிவி, கேஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்தது.
இது நடைமுறைக்கு ஒத்து வராது. கலர் டிவியை இலவசமாக கொடுக்க வேண்டும்என்றால் ஒரு டிவி ரூ. 5,000 என்று வைத்துக் கொண்டாலும் இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவது மிகக் கடினம். மக்களை ஏமாற்றும் திட்டம் இது.
இந்தத் திட்ட அறிவிப்பைத் தடுத்து நிறுத்தக் கோரி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக புகார்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யாரும்ஆஜராகவில்லை.
இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications