குடிநீர் திட்டம்: ஜெ-ஸ்டாலின் மோதல் தீவிரம்
சென்னை:
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எனது அரசு நிறைவேற்ற முடியாததற்குமுதல்வர் கருணாநிதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவும் தான் காரணம்என்றும் இந்த விஷயத்தில் எனது அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைஅமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
பழம் உரிச்சாச்சு...கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் எனதுஅரசு ஏற்கனவே செய்து முடித்து விட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாஅந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதைச் செய்ய அவருக்குகருணாநிதி உத்தரவிட வேண்டும்.
பழத்தை உரித்துக் கொடுத்து விட்டேன். எடுத்து சாப்பிட வேண்டியதுதான் பாக்கிஎன்று ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஏன் சாப்பிடலை...
இதற்குப் பதிலளித்து அறிக்கை விட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்,பழத்தை உரித்து வைத்து விட்டு அதை 3 ஆண்டுகளாக ஏன் சாப்பிடவில்லைஜெயலலிதா என்று கிண்டலடித்து பதில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் அறிக்கை போர்:
ஸ்டாலினின் பதிலுக்கு தற்போது ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க உதவும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குமத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர்ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். ஆனால் சொன்னபடி தமிழகஅரசுக்கு நிதி வந்து சேரவில்லை.
காத்திருந்து காத்திருந்து ஏமாந்த எனது தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின்உதவி இல்லாமலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அந்தமுடிவின்படி, திட்டத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, இயக்கி, ஒப்படைக்கும்திட்டத்தின் கீழ் செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் டெண்டர்கள் வந்து சேர வேண்டும் என்றுகெடு விதிக்கப்பட்டிருந்தது. 26 ஒப்பந்தகாரர்கள் டெண்டர் விண்ணப்பம்வாங்கியிருந்தும் 2 பேர் மட்டுமே டெண்டரை, கடைசி நாளன்று சமர்ப்பித்தனர்.
ஆனால் இரு ஒப்பந்தகாரர்களுமே உரிய டேவணித்தொகையை செலுத்தத்தவறியதால் 2 டெண்டர்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் 2003ம்ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை கடைசி நாளாக கொண்டு 2வது முறையாக டெண்டர்அறிவிக்கப்பட்டது.
இப்போது 3 நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. இதில் உரிய டேவணித்தொகையை செலுத்திய ஒரு நிறுவனத்தின் டெண்டர் மட்டும் பிரிக்கப்பட்டது.ஆனால், டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் ஒன்றைச்சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அரசுக்கு சாதகமாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.
இருப்பினும் பிரிக்கப்பட்ட டெண்டருக்குரிய நிறுவனத்தினர் சமர்ப்பித்த விண்ணப்பம்ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் அந்த டெண்டரை அரசு நிராகரித்துவிட்டது.
பின்னர் 3வது முறையாக 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியை கடைசி நாளாகக்கொண்டு டெண்டர் விடப்பட்டது. இப்போது 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன.அதில் குந்ைத தொகைக்கு டெண்டர் கேட்ட ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம்தேர்ந்தெடுக்கப்பட்டது.
டெண்டர்கள் பணிகள் முடிந்த நிலையில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதிஇத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை நான் தொடங்கி வைத்தேன். தினசரி 100மில்லியன் லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டம்வடிவமைக்கப்பட்டது.
ராஜா தான் காரணம்:
ஆனால் திட்டமிட்டபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதற்குக்காரணம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாதான். திட்டத்திற்கு அனுமதிகொடுப்பதை விட்டு விட்டு தேவையில்லாத பல கேள்விகள், சந்தேகங்களைக் கேட்டுதிட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தார் ராஜா.
திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் இத்திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போட்டார் ராஜா. மத்திய நிதி அமைச்சர்ப.சிதம்பரம் 1000 கோடி ரூபாய் உதவி தருகிறது மத்திய அரசு என்று சொல்லிச்சொல்லி வந்தாரே தவிர ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு இன்று வரை வரவில்லைஎன்பதே உண்மை.
இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்களாகவே அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தோம். எங்களுக்காக ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது செய் வேண்டுமேஎன்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தோம். ஆனால்திமுக தலைவர் கருணாநிதியும், அவரது கட்சி அமைச்சர் ராஜாவும் சேர்ந்துஇத்திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர்.
உண்மை இப்படி இருக்க நான் வேண்டும் என்றேதான் இத்திட்டத்தைஅமல்படுத்தாமல் காலம் தாழ்த்தினேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதுஅபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெ. பச்சை பொய்-ஸ்டாலின்:
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது ஏன் என ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின்கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியிலிருந்து இறங்கி விட்ட நிலையிலும் சரி, பச்சை பொய்களை அறிக்கைகளாக வெளியிட்டு பொதுமக்களைஏமாற்றி திசை திருப்புவதையே தனது வாடிக்கையாகக் கடைபிடித்து வருகிறார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பரிசீலனை செய்வதற்கு 2003 முதல் 2005 வரை ஏற்பட்ட 3 ஆண்டு காலதாமதத்துக்கு தற்போது ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால் தான் தாமதம் என்று சொல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஏனென்றால் அந்தப்பிரச்சனை நீதிமன்றத்துக்குச் செல்லக் காரணமே ஜெயலலிதா தான்.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஜெயலலிதா கையெழுத்திட்டது நன்னீர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் தான். ஆனால் அனுபவம்மிக்க ஜெயலலிதா வெறும் ஒப்பந்தம் கையெழுத்தானயே திட்டச் செயலாக்க நடவடிக்கை என்று சொல்லிக் கொள்வதை நிர்வாக நடைமுறை தெரிந்தஎவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மர்மம் என்ன?:
இது வரை எந்த அரசும் செய்ய முன்வராத சலுகைகளை ஜவிஆர்சிஎல் என்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு ஜெயலலிதா செய்திருப்பது பற்றி எனது அறிக்கையில்எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன?
இந்த பின்னணியை விளக்கி விட்டு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைப் பற்றி மேலும் பேசுவது அனுபவம் வாய்ந்தவருக்கு அழகாகும் என்பதைசுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications