உள்ளாட்சித் தேர்தல்: ஆகஸ்டில் முடிவு - கார்த்திக்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மதுரையில் ஆகஸ்ட் 6ம் தேதி முடிவுஎடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கிடுக்கிப் பிடி தாக்குதலை சமாளிக்க முடியாமல்திணறி, தனித்துப் போட்டியிட்டு, பிரசாரமே முழுமையாக செய்ய முடியாமல்போட்டியிட்டு, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்ததுபார்வர்ட் பிளாக் கட்சி.தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் நிலை குறித்தும், எதிர்கால திட்டங்கள்குறித்தும் வாய் திறக்காமல் இருந்து வந்தார் கார்த்திக்.
இந்த நிலையில் நேற்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ்சென்னைக்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடன் இருந்த நடிகர் கார்த்திக்பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியைச்சந்தித்ததில் பெரிய அளவில் ஏமாற்றம் இல்லை.
எங்களது பலத்தைத் தெரிந்து கொண்டோம். எந்தத் தொகுதிகளில் அதிக கவனம்செலுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டோம்.
பல தொகுதிகளில் எங்களது கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. உசிலம்பட்டிதொகுதியில் மட்டும் கூட்டணி வைத்தோம்.
இப்போதும் திமுக, அதிமுகவை நாங்கள் சம தூரத்தில்தான் வைத்துள்ளோம். தமிழகஅரசின் நல்ல திட்டங்களை வரவேற்கிறோம், எதிர்காலத்திலும் வரவேற்போம்.
ஆகஸ்ட் 6ம் தேதி மதுரையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளோம்.
அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவது என்பது குறித்து முடிவுஎடுப்போம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிரமத்தைக்கொடுத்துள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாகவே தமிழக மக்கள்இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருப்பார்கள். உயர் கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நல்ல திட்டம், அதை வரவேற்கிறேன்என்றார் கார்த்திக்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் போராட்டம்நடத்தியதைப் போல பார்வர்ட் பிளாக் ஏன் போராடவில்லை என்று செய்தியாளர்கள்கேட்டபோது, எங்களது இயக்கத்தை சரி செய்யவே போராட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து எப்படிப் போராட்டம்நடத்துவது என்றார் கார்த்திக். நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நீங்கள்போட்டியிடுகிறீர்களா என்று கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்தகார்த்திக், எனக்கு அந்தத் திட்டம் இல்லை.
ஆனால் எனது நண்பர்கள் போட்டியிடுமாறு வற்புறுத்துகிறார்கள். இதுகுறித்துஇன்னும் முடிவெடுக்கவில்லை. அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடக் கூடாதுஎன்று கூறியுள்ளார். அவரது கருத்தில் ஒரு நியாயம் உள்ளதை மறுக்க முடியாது.
கலைக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றார் கார்த்திக்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications