ஹனிமூனில் பயங்கரம்: கணவரைக் கொன்ற மனைவி-காதலனுடன் கைது
திருவனந்தபுரம்:
ஹனி மூனில் தனது கணவரை, காதலன் மற்றும் அவரது நண்பரின் உதவியுடன் கொலை செய்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை பம்மல் சங்கர் நகரை சேர்ந்த அனந்தராமன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யாவுக்கும்சமீபத்தில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் நேற்று தேனிலவுக்காக கேரள மாநிலம்மூணாறுக்கு சென்றனர்.அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். இந் நிலையில் ஸ்ரீவித்யா மூணாறு போலீசுக்கு போன் செய்துதனது கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அவரை சென்னையைச் சேர்ந்த அன்பராஜ் (28), ஆனந்த் (25)இருவரும் தனது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டனர் என கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீவித்யாவிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது ஸ்ரீவித்யா முன்னுக்கு பின் முரணாண தகவல்களை தந்தார். மேலும் மனநிலைபாதிக்கப்பட்டவர்போல உளறினர். இதனால் போலீசாருக்கு ஸ்ரீவித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது ஸ்ரீவித்யா தங்கியிருந்த லாட்ஜ்க்கு பக்கத்தில் இன்னொரு லாட்ஜில் தங்கி இருந்த ஸ்ரீவித்யாவின்காதலன் அன்பராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணைநடத்தினர்.
அப்போது அன்பராஜ், ஆனந்த் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அனந்தராமனை ஸ்ரீவித்யாவின் உதவியுடனேயே நாங்கள் கொலை செய்தோம். பின்னர் தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஸ்ரீவித்யா தனது கணவரை நாங்கள் கொலை செய்து விட்டோம் என்று நாடகம்ஆடி உள்ளார் என அவர்கள் கூறினர்.
ஸ்ரீவித்யாக்கும், அன்பராஜூக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்துள்ளது. இதை தெரிந்த ஸ்ரீவித்யாவின்பெற்றோர்கள் அவரை கட்டாயப்படுத்தி அனந்தரானுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். தேனிலவுக்காகமூணாறு செல்லும் செய்தியை அன்பராஜூக்கு ஸ்ரீவித்யா தகவல் கொடுத்துள்ளார். இதனால் அன்பராஜ் தனதுநண்பர் ஆனந்தை துணைக்கு அழைத்துக் கொண்டு மூணாறு வந்தார்.
அங்கு வைத்து அனந்த ராமனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அன்பராஜும், ஆனந்தும் வாக்கு மூலம்கொடுத்தனர்.
இதைதொடர்ந்து ஸ்ரீவித்யா, அன்பராஜ், ஆனந்த் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications