சென்னையில் வழக்கறிஞர் படுகொலை, நகைகள் கொள்ளை-நள்ளிரவில் பயங்கரம்
சென்னை:
சென்னையில் வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு மாதவரம் பால் பண்ணை அஜீஸ் நகர் 3வது தெருவில் இச் சம்பவம் நடந்தது. வழக்கறிஞரானஅருள்நாதன் (40) முகப்பேரில் உள்ள கலைச்செல்வி கருணாலயா எனும் அமைப்பின் திட்ட அதிகாரியாகபணியாற்றி வந்தார். இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அருள்நாதனை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை நடந்தபோது பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த இவரது மனைவி மேரி சேவியருக்கு எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை பயன்படுத்தி மர்ம கும்பல் கொள்ளையில் ஈடுபட்டள்ளது. மேரி சேவியர் படுத்திருந்த அறையில் இருந்தபீரோ மற்றொரு அறையில் இருந்த பீரோ ஆகியவற்றை உடைத்து பொருட்களை மர்ம மனிதர்கள் சூறையாடினர்.
30 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு, கதவை வெளிப் பக்கத்திலி பூட்டி விட்டு கொள்ளையர்கள் தப்பிஓடிவிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கண் விழித்த மேரி ஹாலுக்கு வந்த போது அருள்நாதன்குப்புறப்படுத்த நிலையில் இருந்தார்.
அப்போது மேரி அவர் அருகில் சென்று பார்த்த போது அருள்நாதன் வாயில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைககண்டு அதிர்ச்சி அடைந்தார். அருள்நாதனை தட்டி எழுப்பினர். அப்போது தான் மேரிக்கு அருள்நாதன் பிணமாகிகிடப்பது தெரிந்தது.
இதை கண்ட மேரி சத்தம் போட்டுள்ளார். இவரின் கதறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் அஜீஸ் நகரே அங்கு திரண்டு விட்டது. சிலர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது மர்ம மனிதர்கள் அருள்நாதனை கொலை செய்து விட்டு, 2 பீரோக்களை உடைத்து கொள்ளைஅடித்திருப்பதைப் பார்த்தனர்.
போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. கொலையாளிகளை பிடிப்பதற்காக உடனடியாக மோப்ப நாய்வரவழைக்கப்பட்டது. அது அருள்நாதன் வீட்டில் இருந்து மஞ்சம்பாக்கம் ஜங்ஷனில் போய் நின்றது.
எனவே மர்ம மனிதர்கள் கொலை, கொள்ளை செய்து விட்டு மஞ்சம்பாக்கம் ஜங்ஷனில் இருந்து வாகனத்தில்தப்பிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications