பாஜக அறிவு ஜீவிகள்.. ராதாகிருஷ்ணன் தாக்கு
மேடவாக்கம்:
அறிவு ஜீவிகளை நம்பி பயணம் செய்கிற அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்று பாஜகமாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் தாம்பரத்தை அடுத்த மேடவாக்கத்தில்நடந்தது. இக் கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,தேர்தலில் கூட்டணி காண்பது எளிதல்ல, தற்போதுள்ள கூட்டணியை அப்படியே தொடர்வதும் எளிதல்ல. நம்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து இருந்தால் கூட அரை சதவீதம் ஓட்டுகள்கிடைத்திருக்கும். நம் கட்சியில் 7,50,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 6,76,000 வாக்குகளையேபெற்றுள்ளோம்.
ஆங்கிலேயரிடம் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தது காங்கிரஸ், அதை மனதில் வைத்துத் தான் மக்கள்இன்னமும் காங்கிரசுக்கு வாக்களிக்கின்றனர். அதிமுகவை விமர்சித்ததை நம்பி மக்கள் திமுகவுக்குவாக்களித்துள்ளனர்.
திமுகவை விமர்சித்ததை நம்பி அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர். இரண்டுமே வேண்டாம் என்று சொன்னதைஏற்றுக் கொண்டு விஜயகாந்த் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அதனால்தான் நாம் இவ்வளவு பெரிய தோல்வியைதழுவினோம்.
மக்கள் நாடி துடிப்பை அறிந்து செயல்பட வேண்டும். வெறும் அறிவு ஜீவிகளை நம்பி அரசியல் செய்ய கூடாது.மக்களுக்கு எவ்வளவோ செய்தோம். நம்மை மறந்து விட்டார்களே என நினைக்க வேண்டாம். மக்கள் நம்மிடம்இன்னும் அதிகம் எதிர்பார்கின்றனர் என்று அதற்கு அர்த்தம். தேர்தலில் 16 தலித் இயக்கங்கள் பாஜகவுடன்இணைந்து பணியாற்றின என்றார்.
அடுத்த தலைவர் யார்?
இதற்கிடையே கடந்த மே மாதமே ராதாகிருஷ்ணனின் பதவி காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இன்னும்பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ராதாவுக்குப் பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள்தேர்தல் நடக்கிறது. ஆனால், அது அக்டோபர் மாதம் தான் நடக்குமாம்.
புதிய தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வைத்திலிங்கம்ஆகியோரது பெயர் அடி படுகின்றன.
திருநாவுக்கரசரும் இந்தப் பதவிக்கு குறி வைத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications