ராகுல் கேக் எறிந்து காங். தொண்டர்கள் சண்டை; சட்டைக் கிழிப்பு!
சென்னை:
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது கோஷ்டிப் பூசல்வெடித்ததில், வெட்டுவதற்காக வைத்திருந்த கேக்கை ஒருவர் மீது ஒருவர் எறிந்துகாங்கிரஸ் தொண்டர்கள் சண்டை போட்டுக் கொண்டனர். கைகலப்பில் பலரதுசட்டைகள் கிழிந்தன, வேட்டிகள் உருவப்பட்டன.
தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியின் 37வது பிறந்த நாள் விழா காங்கிரஸ்கட்சியினர் கொண்டாடினர். சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் சட்டசபைகாங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் கேக் வெட்டினார்.இந் நிகழ்ச்சியில் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ்தலைவரும், எம்.எல்.ஏவுமான விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார்உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது தென் சென்னை மாவட்டஇளைஞர் காங்கிரஸ் தலைவர் வில்லியம்ஸ் (இவர் விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர்)தனது ஆதரவாளர்களோடு அங்கு வந்தார்.
இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின்(விஷ்ணுபிரசாத்தின் தந்தை) பெயரை ஏன் போடுவதில்லை என்று கேட்டுவில்லியம்ஸும் அவரது ஆதரவாளர்களும் மயூரா ஜெயக்குமாரிடம் வாக்குவாதம்செய்தனர்.
வாக்குவாதம் முற்றி மோதல் மூண்டது. பிறந்த நாளுக்காக வெட்டுவதற்குவைத்திருந்த கேக்கை இரு தரப்பினரும் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர். கைகலப்பிலும் இறங்கினர்.
பலரது சட்டைகள் கிழிக்கப்பட்டன. வேட்டிகள் கந்தலாயின. பெரும் அமளி, துமளிநிலவியது.
தகவல் அறிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரைந்து வந்து இருதரப்பினரையும் அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், மோதல் வெகு நேரம் நீண்டது.
நீண்ட நேரத்துக்குப் பின் சண்டை ஓய்ந்தது. மூஞ்சிகளில் ஓட்டியிருந்த கேக்கைதுடைத்தவாறு அங்கிருந்து அகன்றது இந்தக் கும்பல்.. ஸாரி.. காங்கிரஸ் கட்சியினர்.












Click it and Unblock the Notifications