வக்கீல் படுகொலை: அடித்துக் கொன்ற மனைவி - திட்டம் தீட்டிய கள்ளக்காதலன்கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே மாதவரத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயங்கச் செய்து பின்னல் தலையணையால்அமுக்கியும், இரும்புக் குழாயால் அடித்தும் பயங்கரமாக கொலை செய்த அவரதுமனைவியையும், திட்டம் தீட்டிக் கொடுத்த கள்ளக்காதலனையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை மாதவரம் அஜீஸ் நகரில் வசித்து வந்தவர் அருள்நாதன். கிருஷ்ணகிரியைச்சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். கப்பேரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில்திட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மேரி சேவியர் என்ற மனைவியும், அந்தோணி இருதயராஜ் என்ற மகனும்,ஏஞ்சலின் மேரி என்ற மகளும் உள்ளனர். மேரி சேவியர் மாதவரம் பஸ் டிப்போஅருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

அருள் நாதன் நேற்று அதிகாலை வீட்டில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீஸார்விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த நகை, பணம்திருடப்பட்டதாக மேரி சேவியர் போலீஸில் கூறினார்.

வீட்டை சோதனையிட்டுப் பார்த்தபோது, போலீஸாருக்கு பல சந்தேகங்கள்ஏற்பட்டன. இதையடுத்து அருள்நாதன் மற்றும் மேரியின் செல்போன்களைப்போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மேரியின் செல்போனிலிருந்து கொலை நடந்த இரவில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குபலமுறை போன் செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், வீட்டின் முன் கதவுஉடைக்கப்படாததும், திறந்தே இருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தைவலுப்படுத்தியது.

இதையடுத்து மேரியை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் போலீஸாருக்கு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குற்றவாளி வேறு யாரும் இல்லை, மேரிதான்அவர் என்ற விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.

அருள்நாதன் குடியிருந்த வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி வசிப்பவர் ஆரோக்கியதாஸ்.இவர் அருள்நாதனின் அண்ணன் மகன். கிருஷ்ணகிரியில் கம்ப்யூட்டர் டிப்ளமோமுடித்து விட்டு வேலையில் இருந்த தாஸை அருள்நாதன்தான் ஊருக்கு அழைத்துவந்து தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.

அவருக்காக அலங்கார மீன் விற்கும் நிலையம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார்.அருள்நாதன் வீட்டில் தங்கியிருக்கும் போது தாஸுக்கும், மேரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அருள்நாதன் இல்லாத நேரங்களில் இருவரும்சந்தோஷமாக இருந்துள்ளனர்.

ஏற்கனவே அருள்நாதனுடன் குடும்பம் நடத்தப் பிடிக்காமல்தான் வாழ்ந்து வந்தாராம்மேரி. அவரது சோகத்திற்கு வடிகாலாக வந்து அமைந்தார் தாஸ்.

கள்ளத் தொடர்பு குறித்து அருள்நாதனுக்குத் தெரிய வந்து மேரியை அவர் கடுமையாககண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தாஸ், அதே தெருவில் வேறு வீட்டுக்குவாடைக்கு குடியேறினார். கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதைவிரும்பாத மேரி அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்.

ஆனால் அதற்கான தைரியம் அவருக்கு வரவில்லை. இதனால் என்ன செய்வது என்றுஆரோக்கியதாஸிடம் யோசனை கேட்டுள்ளார். அருள்நாதானை பேசாமல் கொலைசெய்து விடுமாறு மேரிக்கு தாஸ் யோசனை கூறியுள்ளார்.

மேலும், விஷத்தன்மை உள்ள தூக்க மாத்திரைகளை வாங்கி தருகிறேன். அதைசாப்பாட்டில் கலந்து அருள்நாதனிடம் கொடுத்து விடு. அவர் தூக்கத்திலேயே இறந்துவிடுவார். யாருக்கும் சந்தேகம் வராது என்று யோசனை கூறியுள்ளார் தாஸ்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு குடும்பத்தோடு அனைவரும் மாடியில் காற்றுவாங்கினர். அதன் பின்னர் இரவு சாப்பாட்டை கணவருக்குக் கொடுத்துள்ளார் மேரி.

அதில் தாஸ் கொடுத்த 25 தூக்க மாத்திரைகளை நன்கு தூளாக்கி கலந்திருந்தார்.சாப்பாடு கசப்பாக இருந்ததைப் பார்த்த அருள்நாதன் பாதி சாப்பாட்டை வைத்துவிட்டார்.

பின்னர் சிறிது நேரம் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அந்த இடைப்பட்டநேரத்தில் தாஸுக்குப் போன் செய்த மேரி, பாதி சாப்பாட்டை மட்டுமே அருள்நாதன்சாப்பிட்டதாக கூறினார்.

அதற்கு தாஸ், பரவாயில்லை இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்.

இதன் பின்னர் படுக்கை அறையில் மேரியும், அவரது மகளும் படுத்துக் கொண்டனர்.அருள்நாதனும், மகனும் நடு அறையில் படுத்துத் தூங்கினர்.

நள்ளிரவுக்கு மேல் அருள்நாதன் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் மேரிக்கு வந்தது.இதையடுத்து மீண்டும் தாஸுக்குப் போன் செய்து, அவர் இறந்து விட்டால் எப்படிமற்றவர்களை நம்ப வைப்பது என்று கேட்டுள்ளார்.

அதற்கு தாஸ், வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி விடு, நகைகளையும் திருடியதாக கூறி விடு என்று யோசனைதெரிவித்தார்.

இதை ஏற்ற மேரி, கொள்ளை நடந்தது போல வீட்டில் சில செட்டப்களை செய்தார்.மேலும், தலையணையால் முகத்தை அழுத்தியும், இரும்புக் குழாயால் அடித்தும்அருள்நாதன் இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

நேற்று காலை அருள்நாதன் இறந்த செய்தியை வெளியே பரப்பினார் மேரி.போலீஸார் முதலில் மேரி மீது சந்தேகம் கொள்ளவில்லை. வட நாட்டுக்கொள்ளையர்கள் கைவரிசையாக இது இருக்கக் கூடும் என நினைத்தனர்.

ஆனால் மேரியிடம் பேசியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதுஅவர்களுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. மேலும், வீட்டின் முன்கதவுஉடைக்கப்படாமல் திறந்திருந்ததும் அவர்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இறுதியில் மேரிதான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.

மேரியைக் காட்டிக் கொடுத்தது வேறு யாருமல்ல அவரது மகன் இருதயராஜ்தான்.

தந்தையைக் கொலை செய்ததை இருதயராஜ் பார்த்து விட்டான். இதையடுத்துஅவனை அழைத்து, கொள்ளையர்கள் வந்துதான் அப்பாவைக் கொலை செய்து விட்டுநகைகளையும் கொள்ளையடித்துச் சென்றார்கள் என யார் கேட்டாலும் கூற வேண்டும்என்று சொல்லி வைத்திருந்தார் மேரி.

ஆனால் போலீஸார் தன்னிடம் இதுபற்றிக் கேட்டபோது, நடந்த உண்மையைஅப்படியே கூறி விட்டான் சிறுவன் இருதயராஜ். இதைத் தொடர்ந்தே மேரி குற்றவாளிஎன்பது நிரூபணமானது.

கைது செய்யப்பட்ட மேரி காவல் நிலையத்தில் இருந்தபோது, சிறுவன்இருதயராஜும், அவனது தங்கை ஏஞ்சலின் மேரியும் தாயைக் கட்டிப்பிடித்துஅழுதபடி, எப்பம்மா வீட்டுக்கு வருவீங்க என்று கதறி அழுதபடி கேட்டதுபோலீஸாரையே உலுக்கியது.

மேரியும், தாஸும் கைது செய்யப்பட்டு, 30 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.கொலை நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளிகளைப் பிடித்ததற்காக போலீஸ்தனிப்படைக்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 2 நாட்களில் இரண்டு பேர் கள்ளக் காதல் விவகாரத்தில்மனைவிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். பம்மல் பகுதியைச் சேர்ந்தவெங்கட்ராமன் மனைவி ஸ்ரீவித்யாவோடு மூணாறுக்கு ஹனிமூனுக்காகசென்றிருந்தார்.

அப்போது அங்கு வைத்து ஸ்ரீவித்யா தனது கள்ளக்காதலரோடு சேர்ந்துவெங்கட்ராமனைத் தீர்த்துக் கட்டினார்.

இந்த அதிர்ச்சிகரமான செய்தியிலிருந்தே சென்னை மக்கள் மீளாத நிலையில்மாதவரத்தில் வழக்கறிஞர் அருள்நாதன் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனால்கொலை செய்யப்பட்டது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+