இலங்கை அமைச்சர் இந்தியா விரைகிறார்
டெல்லி:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்துமுதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்எம்.கே.நாராயணன் தமிழகம் வரவுள்ளார்.
நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில்பேசியபோது இது முடிவு செய்யப்பட்டது.
இந்திய உள்நாட்டு உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோவின் முன்னாள்இயக்குனரான நாராயணன், காங்கிரஸ் தலைமையின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்.கேரளத்தைச் சேர்ந்த இவரை, ஜே.என். தீட்சித்தின் மறைவுக்குப் பின் தேசியபாதுகாப்பு ஆலோசகராக பிரதமர் நியமித்தார்.
இப்போது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும்நாராயணன் தான் ஒருங்கிணைத்து வருகிறார்.
இடதுசாரி அரசியல் மற்றும் கம்யூனிசத்தில் சிறந்த நிபுணரான நாராயணன்,சென்னையில் தான் நீண்ட காலம் வசித்து வந்தார். தமிழக அரசியல் நிலை, இலங்கைவிவகாரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்தவர்.
![]() |
முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி இலங்கை விவகாரத்தில் நல்லதொருமுடிவை பிரதமர் எடுக்க நாராயணன் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம் தொடர்கிறது: புலிகள்
இதற்கிடையே இலங்கை அரசுடன் செய்துகொண்டுள்ள சண்டை நிறுத்த உடன்பாடு இன்னும் தொடர்வதாகவும் அதில் தங்களுக்கு முழு சம்மதமே என்றும்விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நார்வேக்கு விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் அனுப்பியுள்ள கடிதத்தில்,
போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். அமைதி காண மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். ஜரோப்பியயூனியனைச் சேர்ந்த பின்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகியவை புலிகள் அமைப்புக்கு எதிராக கடந்த மாதம் தடை விதித்தன. இந்த 3 நாடுகளும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் நீடிக்குமா என்பது பற்றி நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்சுருடன் இன்று பேசும்போது விவாதிக்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது.
நார்வே தூதர்-தமிழ்ச் செல்வன் சந்திப்பு:
இந் நிலையில் இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் இன்று கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசினார்.
அப்போது தங்களுக்குத் தடை விதித்த நாடுகள் அமைதி கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று புலிகள் அவரிடம் வலியுறுத்தியதாகத்தெரிகிறது.
புத்தர் கோயில் மீது தாக்குதல்: இலங்கை புகார்
இந் நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சோமாவதி புத்தர் கோயில் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக தூப்பாக்கியால் சுட்டதாக இலங்கைராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் திரிகோணமலையின் தெற்கே துறைமுக நகரமான முத்தூரில் உள்ள கடற்படை தளத்தின் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் டிகேபி திஸ்ஸநாயகே கூறியுள்ளார்.
தமிழ் சர்ச் மீதான தாக்குதல்-பிஷம் கண்டனம்:
இதற்கிடையே நாட்டிலேயே மிகப் பெரிய அன்னை ஆலயமான அவர் லேடி ஆப் விக்டரி ஆலயத்தின் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமானதாக்குதல் குறித்த வாடிகனுக்கு மன்னார் பகுதி பிஷப்பான ராயப்பு ஜோசப் புகார் அனுப்பியுள்ளார்.
அதில், புனித ஆலயத்தை இலங்கை கடற்படை சேதப்படுத்திவிட்டது. அப்பாவிகளின் ரத்தத்ததை ஆலயத்துக்கு சிந்த வைத்து தனது ஆதிக்க மனப்போக்கைவெளிப்படுத்திவிட்டது இலங்கை என்று பிஷப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெவை சந்தித்த இலங்கை தூதர்:இலங்கை விஷயத்தில் திமுக கூட்டணிக்குப் போட்டியாக அதிமுகவும் களத்தில் குதித்துள்ளதாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளதாலும் இலங்கை அரசு, இவற்றை கெளண்டர் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடும் நிலை கொண்ட ஜெயலலிதா இதுவரை இலங்கை விஷயத்தில் பெரிய அளவில் அக்கறைகாட்டாமல் இருந்தார். ஆனால், இப்போது அவர் எடுத்துள்ள நிலை இலங்கை அரசை பயத்தில் தள்ளியுள்ளது.
இதையடுத்து அவரை இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இலங்கை அமைச்சர் வருகை:
திமுக, அதிமுகவின் நெருக்குதலால் தங்களுக்கு எதிரான நிலை எதையும் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்று அச்சப்படும் இலங்கை அரசு, தனதுவெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவை டெல்லிக்கு அனுப்புகிறது.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் முக்கிய ஆலோசனை நடத்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சென்னைக்குவரவுள்ள நிலையில் இலங்கை அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றிரவு டெல்லி வரும் சமரவீரா, நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும்தாக்குதல் குறித்து பிரதமர் புகார் கூறக் கூடும் எனத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications