மாணவியிடம் எஸ்எம்எஸ் குறும்பு: கோழி கைது
சென்னை :
பிளஸ்டூ படிக்கும் மாணவிக்கு ஒரே நாளில் 500 எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பிடீஸ் செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெண்களின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆபாசஎஸ்.எம்.எஸ். அனுப்பும் டுபுக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் தினசரிஏராளமான எஸ்.எம்.எஸ். புகார்கள் குவிந்து கொண்டுள்ளன.இந் நிலையில் வித்தியாசமான ஒரு கேஸ் வந்துள்ளது. திருவான்மியூர் திருவள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் செல்வம். துரைப்பாக்கத்தில் கோழிக்கடை வைத்துள்ளார்.இவருக்கு கோழி செல்வம் என்றும் பெயர் உண்டு. எப்படியோ ஒரு செல்போனைஉஷார் செய்து விட்டார் செல்வம்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மேனகா. இவர் பிளஸ்டூ படித்து வருகிறார். மேனகா மீதுமோகம் கொண்ட செல்வம், அவரிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார். ஆனால்மேனகா மறுத்து விட்டார்.
இருந்தாலும் தொடர்ந்து மேனகாவை துரத்திக் கொண்டிருந்தார். கோழிக்கடைவைத்துள்ளேன், நல்ல வருமானம், என்னைக் கல்யாணம் செய்து கொள், உன்னைநன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செல்வம்.
ஆனால் மேனகா விட்டுக் கொடுக்கவே இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த செல்வம்,மேனகாவின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அதில் தினசரி எஸ்.எம்.எஸ்.அனுப்ப ஆரம்பித்தார்.
காதலி என்னைக் காதலி என்ற ரீதியில் ஆரம்பித்த செல்வத்தின் எஸ்எம்எஸ்அட்டகாசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டஎஸ்.எம்.எஸ்.களை அனுப்பினார் செல்வம்.
அதில் ஏகத்துக்கும் ஆபாசம் வேறு. இனியும் பொறுக்கக் கூடாது என்று பயந்து போனமேனகா தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து மேனகாவின் தந்தை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில்செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.
கோழிக் கடையை ஒழுங்காக பார்க்காமல், கோழி பின்னால் அலையும் சேவல் மாதிரிஅலைந்த செல்வம் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
செல்வம் கவுண்டிங் ஸ்டார்ட்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications