சத்துணவில் பல்லி; 92 குழந்தைகள் மயக்கம்
சென்னை:
பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 92 பள்ளிக் குழந்தைகள் மயக்கமடைந்தன.இதனால் பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு நேற்றுபிற்பகல் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது.இந்த உணவை 128 மாணவ, மாணவியர் சாப்பிட்டனர். அனைவரும் 12 வயதுக்குஉட்பட்டவர்கள். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களில் 92 பேர் தலை சுற்றி,வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியமாக மயக்கமடைந்துவிழுந்த மாணவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச்சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்க நிலைதெளிவிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்துசாப்பாட்டைப் பரிசோதித்துப் பார்த்தனர்.
அப்போது சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தது தெரிய வந்தது. சமையல் கூடத்தில்இருந்த சாம்பாரில் பல்லியின் வால் கிடந்தது தெரிய வந்தது.
மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல்தெரிந்ததும் பெற்றோர்கள் அங்கு விரைந்து வந்து பதட்டத்துடன் தங்களதுகுழந்தைகள் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர்.
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரனும் மருத்துவமனைக்குச் சென்றுகுழந்தைகளைப் பார்த்து நலம் விசாரித்தார்.
குழந்தைகள் அனைவருமே நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications