சர்வதேச பேராலயம் ஆகிறது சாந்தோம் தேவாலயம்
சென்னை:
![]() |
இயேசு நாதரின் சீடர்களில் ஒருவரான புனித தோமையரின் சமாதியின் மீது இந்தபேராலாயம் எழுப்பப்பட்டுள்ளது. இயேசுவின் சீடர்களின் சமாதி மீதுஎழுப்பப்பட்டுள்ள உலகின் 3வது பேராலயம் சாந்தோம் தேவாலயம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னை வங்கக் கடலோரம் எழுப்பப்பட்டுள்ள இந்தப் பேராலயம் கிறிஸ்தவர்களின்பெருமை மிகு அடையாளமாக விளங்குகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடந்த கத்தோலிக்க பேராயர்கள் கூட்டத்தில்,இந்த பேராலயம் தேசிய பேராலயமாக அறிவிக்கப்பட்டது.
இப்போது சாந்தோம் பேராலயம் சர்வதேச பேராலயமாக அறிவிக்கப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை மயிலாப்பூர் ஆர்ச்பிஷப் ஏ.எம். சின்னப்பா செய்தியாளர்களிடம்கூறுகையில்,
சாந்தோம் பேராலயத்திற்கு நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறுநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில் இத்தேவாலயம் ஏற்கனவே உலகப் புகழ் பெற்று விட்டது.
அதிகாரப்பூர்வமாக சர்வதேச பேராலயமாக அறிவிக்கப்பட வேண்டியது மட்டுமேபாக்கி இருந்தது. தற்போது அதற்கும் நேரம் வந்துள்ளது.
![]() |
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படிக் கிடைத்தால் இயேசு நாதரின் சீடர்களின் சமாதியில் மீது எழுப்பப்பட்டு,சர்வதேச பேராலயமாக அறிவிக்கப்பட்ட 3வது பேராலயம் என்ற பெருமை சாந்தோம்பேராலயத்திற்குக் கிடைக்கும்.
தொடர்பான செய்திகள்பு, இயேசுவின் மற்ற சீடர்களான புனித பீட்டர் சமாதியின் மீது ரோம்நகரில் பேராலயம் எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல ஸ்பெயின் நாட்டில் புனிதஜேம்ஸின் சமாதியின் மீது பேராலயம் எழுப்பப்பட்டுள்ளது. இரண்டுமே சர்வதேசபேராலயங்களாக உள்ளன.
தற்போது சென்னைக்கும் இந்தப் பெருமை கிடைக்கவுள்ளது.
சாந்தோம் பேராலயம் கோத்திக் முறையின் கீழ் கட்டப்பட்ட மிகச் சிறந்த பேராலயம்.1896ம் ஆண்டு இந்த பேராலயம் கட்டப்பட்டது. இந்திய மக்களுக்கு மட்டுமல்லாதுஉலகத்தின் பெருமையான அடையாளமாக இது விளங்குகிறது என்றார் சின்னப்பா.
சுனாமி தாக்குதலில் சென்னை கடலோரப் பகுதிகளை அலைகள் கபளீகரம்செய்தபோது, எந்த சேதமும் இல்லாமல் தப்பியது இந்த ஆலயமும் அதைச் சுற்றியுள்ள மீனவர் பகுதிகளும்என்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications