மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்- டாக்டர் கைது
சென்னை:
நாகர்கோவிலைச் சேர்ந்த பி.பார்ம் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாககூறப்பட்ட புகாரில் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பிரின்ஸ்பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
![]() |
இவரிடம் கடந்த ஒன்றரை வருடங்களாக அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர்பிரின்ஸ் பிரபாகரன் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், 2 முறை பலாத்காரம்செய்ய முயன்றதாகவும் 2 நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணை சந்தித்து கதறி அழுதபடி புகார் கொடுத்தார் ஜீனா குமாரி.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு இணைஆணையர் சீமா அகர்வாலை ஆணையர் லத்திகா சரண் பணித்தார்.
இந்த விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஜீனா குமாரி விவரித்தார்.இதைத் தொடர்ந்து டாக்டர் பிரின்ஸை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
நேற்று மாலை 4 மணிக்கு டாக்டர் பிரின்ஸ் பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். தனி அறையில் அவரையும், ஜீனா குமாரியையும் தனித்தனியே அமரவைத்து விசாரணை நடத்தப்பட்டது.
![]() |
இருவரிடம் நடந்த விசாரணை முழுவதையும் போலீஸார் வீடியோவில் பதிவு செய்துகொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணையின்போது தனக்கு நேர்ந்தகொடுமை குறித்து விவரித்த ஜீனா குமாரி, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும்தன்னை டாக்டர் தரப்பு மிரட்டியதாகவும், பணம் கொடுத்து விடுகிறோம், புகாரைவாபஸ் வாங்கு என மிரட்டியதாகவும் தெரிவித்தார் ஜீனா குமாரி.
டாக்டர் பிரின்ஸ் தனது வாக்குமூலத்தில், ஜீனா குமாரியை நான் ஒரே ஒருமுறைதான்பார்த்துள்ளேன். கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது கணவருடன் வந்த அவர்படிப்புக்கு இடையூறாக இருப்பதால் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்றுகோரிானார்.
அதுதான் நான் முதலும், கடைசியுமாக அவரை சந்தித்தது என்றார் பிரின்ஸ்.விசாரணையின்போது டாக்டர் பிரின்ஸ் பதட்ட்டமாக காணப்பட்டார்.
போலீஸாரின் பல கேள்விகளுக்கு மிகுந்த யோசனைக்குப் பின்னர் பதிலளித்தார்.அடிக்கடி தண்ணீர் வாங்கிக் குடித்து பதட்டத்தைத் தணித்துக் கொண்டார்.
விசாரணையின் இறுதியில் இரவு 9 மணியளவில், மாணவிக்கு கொலை மிரட்டல்விடுத்தது, மானபங்கப்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக டாக்டர் பிரின்ஸைபோலீஸார் கைது செய்தனர்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆர்படுத்தப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட்டில் ஆபாச படங்களை வெளியிட்டதாகடாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது இன்னொரு டாக்டர் செக்ஸ் தொல்லை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications