தயாரிப்பாளர் சங்கம்-விஜயகாந்த் போட்டியில்லை
சென்னை:
தனக்கு எதிர்ப்பு வலுப்பதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இருந்து விஜயகாந்த் விலகுவார் என்றுதெரிகிறது.
மேலும் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார்என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் அதிலும் போட்டியிடவில்லை.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 6 ஆண்டுகளாக விஜயகாந்த் தான் தலைவராக இருந்து வருகிறார்.இப்போது அவர் அரசியல் கட்சி தொடங்கி எம்எல்ஏவாகவும் ஆகிவிட்டார்.
முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் நடிகர் சங்கதேர்தலுக்கு போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார்.ஆனால் திடீரென தன் முடிவை மாற்றி கொண்டு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறினார்.
ஆனால் அரசியலில் இருப்பவர்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வரக்கூடாது என்று கருத்து நடிகர்களிடையேஎழுந்தது. நாசர், மன்சூர் அலிகான், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த கருத்தை வெளிப்படையாகதெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பால் போட்டியிடுவது குறித்து விஜயகாந்த் யோசிக்கத் தொடங்கியுள்ளார்.
இந் நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜூலை9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு திமுக பின்னணியுடன ராம.நாராயணன் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து வலுவான ஒருவரை நிறுத்த ஒருதரப்பினர் முயற்சித்து வந்தனர்.
விஜயகாந்த்தை இப்பதவிக்கு நிறுத்த அவர்கள் முயன்றனர். விஜயகாந்த்தும்போட்டியிட சம்மதித்ததாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில்விஜயகாந்த் சார்பில் வேட்பு மனு வாங்கப்பட்டது.
ஆனால், விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் அவர்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் ராம. நிாராயணன், பாபு கணேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2 துணைத் தலைவர் பதவிகளுக்கு 13 பேரும், 2கெளரவச் செயலாளர் பதவிகளுக்கு 9 பேரும், 1 பொருளாளர் பதவிக்கு 9 பேரும்,21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 81 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே இயக்குனர் பாபுகணேஷ் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார் என்றுகூறப்படுகிறது. அவர் விலகிக் கொள்ளும்பட்சத்தில் ராம. நாராயணன் போட்டியின்றிதேர்வு செய்யப்படுவார். மொத்தம் 450 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கஉள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் வருவதால், கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்துமாறும், பிரச்சாரத்தில் இறங்குமாறும்,நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கங்களை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்துமாறும் விஜய்காந்தை அவரதுகட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் தான் அவர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார் என்று தெரிகிறது.
நடிகர் சங்கத்தை பொறுத்தவரை பிரபு அல்லது சத்யராஜ் போட்டியிட்டால் அவர்களுக்கு விஜய்காந்த் ஆதரவுதருவாராம். நாசரோ அல்லது வேறு யாராவது போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக விஜயகாந்த் வேலைசெய்வரார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications