நடிகையை மிரட்டிய கேப்டன்
சென்னை:
![]() |
நடிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவின்போது நடிகர்கள் விஜயகாந்த் மற்றும்ராதாரவி ஆகியோர் தன்னை ஆள் வைத்து தாக்கியதாக நடிகை தேவி சென்னைமாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் நடிகை தேவி. தற்போது சென்னை ஆழ்வார் திருநகரில்வசித்து வருகிறார். விஜயகாந்த், ராதாரவி ஆகியோருடன் பல படங்களில்நடித்துள்ளார்.
நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்த்தின் அத்தையாக நடித்துள்ளார்.இதுதவிர 200க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார். டப்பிங்கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தேவி விஜயகாந்த்தை எதிர்த்துத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அப்போது சிலர் போட்டியிலிருந்து விலகுமாறுதொலைபேசி மூலம் தேவியை மிரட்டியதாக புகார் கூறப்பட்டது.
மேலும் நடிகர்கள் விஜயகாந்த், ராதராவி ஆகியோரும் தன்னைத் தொலைபேசியில்பேசி மிரட்டியதாக தேவியே புகார் தெரிவித்தார்.
தேர்தலில் விஜயகாந்த் குழுவினர் வெற்ற பெற்றனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்புநிகழ்ச்சியின்போது அங்கு வந்த தேவியை சிலர் தாக்கினர். இதுகுறித்துதேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தேவி புகார் கொடுத்தார்.
அதில், விஜயகாந்த்தும், ராதாரவியும்தான் தன்னை ஆள் வைத்துத் தாக்கியதாகபுகாரில் தேவி தெரிவித்திருந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் இந்தப் புகார் மீதுபோலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அப்போது ராதாரவிஅதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
![]() |
இந் நிலையில் இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னைமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் நேரடியாக புகார் கொடுத்துள்ளார்தேவி.
அதில் அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததாலும், ராதாரவி அதிமுகஎம்.எல்.ஏவாக இருந்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்காவல்துறையினர் விட்டு விட்டனர். எனவே இப்போது அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
விஜயகாந்த்துடன் கடுமையாக மோதி வரும் தேவி, ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில்விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications