மாமியாரையும் கொன்ற கொலைகார மேரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரைக் கொன்ற மேரி அதற்கு முன்தனது மாமியாரையும் கொலை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

Mary

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நாதனை தனது கள்ளக் காதலன்தாசுடன் சேர்ந்து கொன்றார் அவரது மனைவி மேரி.

முன்னதாக அருள்நாதனின் தாயாரையும் தானே கொன்றதாகவும் மேரி பரபரப்புவாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கைதான மேரியையும், அவரது கள்ளக்காதலன் ஆரோக்கிய தாஸையும்திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் மேரியை மட்டும் முதலில்போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது, தனக்கும் ஆரோக்கிய தாஸுக்கும்இடையே இருந்த உறவு, அவருடன் புரிந்த காதல் லீலைகள் என்பது உள்ளிட்ட பலதகவல்களைக் கூறினார் மேரி.

கணவரைக் கொன்று விட்டோமே என்ற பதட்டம் துளியும் இல்லாமல், தாஸ்தான்எனக்கு எல்லாமே, அவர் என்றால் எனக்கு உயிர் என்ற ரீதியில் தாஸ் மீது தான்கொண்டுள்ள காதலை உருக்கமாக போலீஸாரிடம் விளக்கியுள்ளார் மேரி.

அத்தோடு, கணவரைக் கொன்றது போல, அவரது தாயாரையும் தானும், தாஸும்திட்டமிட்டுக் கொலை செய்ததாகவும் அவர் அதிர வைக்கும் வாக்குமூலம்அளித்துள்ளார்.

அதன் விவரம்:

எனக்கு தாஸ் மாமா முறைதான் வேண்டும். அருள்நாதன் எனது தாய்மாமன் என்பதால்அவரைத் திருமணம் செய்து கொண்டேன். இதனால் தாஸ் எனக்கு கணவர் வழியில்மகன் முறையாகி விட்டார். நான் சித்தி முறையாகி விட்டேன்.

இருந்தாலும் தாஸை தன் முதலில் பார்த்து முதல் எனக்கு அவர் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அருள்நாதன், நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதேகட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார்.

பின்னர் என்னை அவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நான் சந்தோஷமாகவே இல்லை. இயந்திரத்தனமாகத்தான்அருள்நாதனுடன் வாழ்ந்த வந்தேன். 2 குழந்தைகளையும் பெற்றேன். இந்நிலையில்தான் தாஸ் எங்களது வீட்டுக்கு வந்து தங்கினார்.

வெறுப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு தாஸுடன் பழக நேர்ந்தது ஆறுதலாகஇருந்தது. அவரது பேச்சும், பழக்கம் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவருடன்காதல் ஏற்பட்டது. தாஸைப் பார்த்து விட்டாலே எனக்கு இனம் புரியாத சிலிர்ப்புஏற்பட்டு விடும்.

அவர் என்ன கேட்டாலும் அதை செய்து முடிப்பேன். அவர் மீது இருந்த ஆசையால்என்னையே அவரிடம் ஒப்படைத்தேன். சினிமா, பீச் என்று சுற்றினோம். பின்னர்வீட்டில் ஒருமுறை தனிமை கிடைத்தபோது உல்லாசமாக இருந்தோம்.

தாஸுடன் எனக்கு ஏற்பட்ட மோகம் அதிகமான நிலையில் ஒருமுறை எனது கணவர்வீட்டில் இருக்கும்போதே, மாடிக்குச் சென்று நானும், தாஸும் உடலுறவு வைத்துக்கொண்டோம். இதை எனது கணவர் பார்த்து விட்டார்.

கோபமடைந்த அவர் தாஸை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் பக்கத்துதெருவில் உள்ள நண்பர் வீட்டில் தாஸ் தங்கினார். அருள்நாதன் வேலைக்குச் சென்றபிறகு நான் அவரைப் பார்த்து விட்டு வருவேன். பள்ளிக்குச் செல்லும்போதும்,வரும்போதும் அருகே உள்ள மைதானத்திற்குச் சென்று அங்கு தாஸை சந்தித்துப்பேசிவிட்டு வருவேன்.

Mary with Doss

நாள் தவறாமல் அவரை பார்த்துப் பேசுவேன். எனது கணவர் வீட்டில் இல்லாவிட்டால்தாஸை வீட்டுக்கு அழைத்து சந்தோஷமாக இருப்பேன். எனது கணவரிடம் கிடைக்காதசுகமும், சந்தோஷமும் தாஸ் மூலம் எனக்குக் கிடைத்தது. இந் நிலையில்தான் எனதுகணவர் வக்கீல் தொழிலை விட்டு விட்டு தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச்சேர்ந்தார்.

இந்த வேலைக்குச் சேர்ந்த பிறகு காலையில் வீட்டை விட்டுப் போனால் இரவுதான்வருவார். அவரிடம் பேசக் கூட நேரம் இருக்காது. தாம்பத்திய சுகத்தையும் எதிர்பார்க்கமுடியாது. சுனாமி வந்தபோது, பல ஊர்களுக்குச் சென்று மாதக்கணக்கில் வீட்டுக்குவராமல் இருந்தார். அந்த நேரத்தில் எல்லாம் தாஸ்தான் எனக்கு பெரும் துணையாகஇருந்தார்.

எங்களது சந்தோஷத்திற்கும், உல்லாசத்திற்கும் அருள்நாதனின் தாயார் சவுரியம்மாள்பெரும் இடையூறாக இருந்தார். நானும், தாஸும் சந்தோஷமாக இருப்பதை அறிந்தஅவர் எனது கணவரிடம் சொல்லி விடுவார். இதனால் வெறுப்புற்ற நான்சவுரியம்மாள் குறித்து தாஸிடம கூறியபோது அவரைக் கொன்று விடு என்றார்.

சர என்று ஒப்புக் கொண்ட நான், கடந்த மாதம் தாஸை எனது வீட்டுக்குவரவழைத்தேன். அப்போது மாமியார் குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது தாஸ், என்னிடம் சீக்கிரம் கொன்று விடு என்றார். எனக்குபயம் வந்து நீயே செய்து விடு என்றேன்.

பின்னர் எனது குழந்தையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்று குழாயிலதண்ணீரைத் திறந்து விட்டேன். அந்த சமயத்தில் தாஸ் இரும்பும் கம்பியால்சவுரியம்மாளின் தலையில் அடித்துக் கொலை செய்தார். பின்னர் இருவருமாக சேர்ந்துஅவரது உடலை குளியலறைக்குள் தள்ளினோம்.

அவர் குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக எனது கணவருக்குப் போன்செய்தேன. நாங்கள் ஆடிய நாடகத்தை எனது கணவரும், மற்றவர்களும் நம்பிவிட்டனர்.

அப்பாடா, தொல்லை நீங்கியது, இனி ஜாலியாக இருக்கலாம் என்று நான்நினைத்தபோது தாஸுடன் பேசுவதற்கு எனது கணவர் பெரும் தடையாக இருந்தார்.அவரைப் பார்க்க, பேசக் கூடாது என்று தடை போட்டார். எல்லாம் அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொடுத்ததால் ஏற்பட்டது.

இந் நிலையில் எனது மாமியாரைக் கொன்றதை அடிக்கடி சொல்லிச் சொல்லி தாஸ்என்னை மிரட்ட ஆரம்பித்தார். அவ்வப்போது பணம் கேட்டு தொல்லை செய்தார்.அலங்கார மீன் கடை வைக்க ரூ. 50,000 பணம் கேட்டார். எனது நகைகளை நிதிநிறுவனத்தில் அடகு வைத்து பணத்தைக் கொடுத்தேன்.

தொடர்ந்து தாஸ் என்னுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இது எனதுகணவருக்குத் தெரிய வர அவர் அதிக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதைதாசிடம் சொன்னபோது எனது கணவரையும் கொலை செய்து விட கூறினார். என்னால்அதைச் செய்ய முடியாது, நீயே அவரையும் முடித்து விடு என்றேன்.

பின்னர் 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாஸ் எங்கள் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த அருள்நாதனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றார் என்றுகூறியுள்ளார் மேரி.

அருள்நாதன், அவரது தாயார் சவுரியம்மாள் ஆகிய கொலைகளுக்குப் பின்னால்தாஸின் குள்ளநரித்தனம் இருப்பதாக மேரி கொடுத்துள்ள வாக்குமூலத்திலிருந்துதெரிய வருகிறது.

அதாவது அருள்நாதனுக்கு சொந்தமான ரூ 10 லட்சம் மதிப்புள்ள வீடு, மேரி மூலம்கிடைக்கும் சுகம், அவரது மாத சம்பளம் ரூ. 10,000 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகஅனுபவிக்கும் பொருட்டு, சவுரியம்மாளையும், அருள்நாதனையும் அடுத்தடுத்துக்கொலை செய்ய மேரியைத் தூண்டியுள்ளார் தாஸ்.

தாஸ் மூலம் தனக்குக் கிடைத்த சுகத்தை மட்டுமே நினைத்துப் பார்த்த மேரியும் இதற்குஉடன்பட்டுள்ளார்.

இந் நிலையில் தாஸை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.அவரிடம் விசாரிக்கும்போது மேலும் பல நாற்றம் எடுத்த தகவல்கள் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+