அகதிகள் சம்மேளன தலைவராக கல்யாணசுந்தரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாலம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தலைவரான கல்யாண சுந்தரம்,சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பல்வேறு சமூக சேவைப் பணிகளில்ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அகதிகள்சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகதிகள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழுவை அமைத்துஅந்தக் குழுவின் ஆலோசனையுடன் கல்யாண சுந்தரம் செயல்படுவார்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் அதிக அளவில் உள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம்உள்ளனர். இவர்களின் குறைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை மத்திய, மாநிலஅரசுகளிடம் கொண்டு செல்ல சர்வதேச அகதிகள் சம்மேளனம் முயற்சி எடுக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் அலுவலகம் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் முகவரி: எண் 1, 4வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை- 20. தொலைபேசி எண்: 044-24402524

உதவி தேவைப்படும் அகதிகள் இந்த அமைப்பு தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+