போலீஸ் செக்ஸ் டார்ச்சர்: அரவாணி தற்கொலை முயற்சி!
சென்னை:
ஓரல் செக்ஸ், ஏனல் செக்ஸ் வைத்துக் கொள்ள போலீஸார் கட்டாயப்படுத்திகொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த அரவாணி ஒருவர் சென்னையில்தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஒரு அரவாணி. 18வயதாகும் பாண்டியன், அழகாக இருப்பார். அரவாணியாக ஆன பின்னரும் கூடபெயரை மாற்றாமல் இருந்து வந்தார் பாண்டியன்.பிழைப்புக்காக அப்பகுதியில் உள்ள சில அரவாணிகளுடன் சேர்ந்து பாண்டியனும்கடை கடையாக ஏறி இறங்கி காசு வாங்கி பிழைத்து வந்தார். சில சமயங்களில்பிச்சையும் எடுப்பாராம்.
இந் நிலையில் கடந்த ஐனவரி மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் பாண்டியனைபோலீஸார் கைது செய்தனர். பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில்அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.
தினசரி வியாசர்பாடி காவல் நிலையம் சென்று அங்கு கையெழுத்திட வேண்டும் என்றுஅவருக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
விடுதலையான முதல் 2 நாட்களுக்கு பாண்டியனுடன் அவரது தாயாரும் காவல்நிலையம் வந்துள்ளார்.
ஆனால் இனிமேல் பாண்டியன் மட்டும்தான் வர வேண்டும். நீ வரக் கூடாது என்றுபாண்டியனின் தாயாரை போலீஸார் எச்சரித்துள்ளனர். இதனால் தாயார் வராமல்பாண்டியன் மட்டும் தனியாக போகத் தொடங்கினார்.
காலை 11 மணிக்கு அவரை ஒரு காவலர் வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்வார். அங்கு போனதும் துயரம் தொடங்குமாம். காவல் நிலையம் அருகேபழைய காவல் நிலைய கட்டடம் உள்ளது.
யாரும் பயன்படுத்தாமல் உள்ள அந்தக் காவல் நிலையத்திற்கு பாண்டியனை சிலகாவலர்கள் அழைத்துச் சென்று ஓரல் செக்ஸ், ஏனல் செக்ஸ் வைத்துக் கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கு பாண்டியன் உடன்படவில்லை. இதையடுத்து போலீஸார் அவரை அடித்துதுவைத்துள்ளனர். நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உனதுசகோதரிகளை (அவர்கள் பெண்கள்) கற்பழித்து விடுவோம் என்று போலீஸார்மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன பாண்டியன், வேறு வழியின்றி அவர்களுக்குஉடன்பட்டுள்ளார். தினசரி இந்தக் கொடுமை நடந்துள்ளது.
போலீஸாரின் கொடுமையால் வெறுத்துப் போன அவர் தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்து, வியாசர்பாடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்தார். உடனடியாகஅவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 37 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறார் பாண்டியன். இந்தசம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications