டாஸ்மாக்கில் பெரும் முறைகேடு: 31 அதிகாரிகள் கூண்டோடு டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 31மாவட்ட மேலாளர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் டெப்போ மேனேஜர்கள் 50 பேர் அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் மது விற்பனை பொறுப்பு மாவட்ட துணை கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் தான் தனியார் மதுக் கடைகள் ஒழிக்கப்பட்டு மது விற்பனை செய்யும் பொறுப்புடாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அரசே மது விற்பனை கடைகளை நடத்தியது.

மதுக் கடைகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு ராசியான பச்சை நிறத்துக்கு மாறின.

தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பானங்கள் வாங்கி விற்கப்படும் என்று அறிவிக்கப்படாலும்,சசிகலா-மன்னார்குடி ஆட்களுக்கு வேண்டிய மிடாஸ் நிறுவனத்தில் தான் பெரும்பாலும் மது கொள்முதல்செய்யப்பட்டது.

மிடாசுக்கே பெரும்பாலான ஆர்டர்களைக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மாவட்ட மேலாளர்களும்,டெப்போ மேனேஜர்களும் தான். மேலும் டாஸ்மாக் தலைவராக தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கச்செய்தார் சசி. அவரும் அனைத்து வகைககளிலும் மிடாசுக்கு உதவினார்.

ஒரு கடையில் எந்த வகையான மது அதிகம் விற்கிறது என்பதை வைத்து அந்தக் கடையின் பொறுப்பாளர் தான்மதுவுக்கான ஆர்டர்களை செய்திருக்க வேண்டும்.

ஆனால், டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பட்டதாரிகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் நியமித்த அதிமுக அரசு,மதுவுக்கான ஆர்டர்களைப் போடும் அதிகாரத்தை மறைமுகமாகப் பறித்தது.

ஆர்டர் காப்பிகளில் டாஸ்மாக் கடை பொறுப்பாளர் கையெழுத்தை மட்டும் போட்டு டெப்போ மேனேஜருக்குஅனுப்பிவிட வேண்டும். அந்த காப்பியில் எந்த மதுவை வாங்க வேண்டும் என்பதை டெப்போ மேனேஜர்களேநிரம்பிக் கொண்டனர்.

இவர்களுக்கு போடப்பட்டிருந்த வாய்மொழி உத்தரவின்படி, பெரும்பாலும் மிடாஸ் நிறுவனம் தயாரிக்கும்மதுவுக்கே ஆர்டரைப் போட்ட டெப்போ மேனேஜர்கள் அதை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துவந்தனர்.

மாவட்ட மேலாளர்கள் அதை ஏற்று மிடாசுக்கே பெரும்பாலான ஆர்டர்களைத் தந்து வந்தனர். இதன் மூலம்டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பெரும்பாலான ஆர்டர்கள் மிடாசுக்கே கிடைத்தன.

தமிழக குடிமகன்களின் புண்ணியத்தால் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை கிடுகிடுவேன பல மடங்கு உயர்ந்தது.

இந் நிலையில் மிடாசுக்கு மட்டும் ஆர்டர்களைத் தந்து, அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக்கையே மிடாசிடம்அடகு வைத்த 31 மாவட்ட மேலாளர்களும் நேற்று இரவு கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

மேலும் டெப்போ மேனேஜர்களாக இருந்த 50 பேரும் அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிறதுறைகளைச் சேர்ந்த இவர்கள் டெபுடேசன் அடிப்படையில் தான் டாஸ்மாக்குக்கு வந்தனர். இவர்கள் அனைவரும்பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர்.

இன்று முதல் இந்த டாஸ்மாக் மது விற்பனை துணை கலெக்டர்கள், தாசில்தார்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.கொள்முதல், சப்ளை, விற்பனை என சகல பணிகளையும் இனி இந்த அதிகாரிகளே கவனிப்பர்.

மிக விரைவில் டாஸ்மாக் நிறுவனத்தையே கலால்துறையில் கீழ் கொண்டு வரவும் திமுக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே மிடாசின் சரக்குகள் தரம் குறைவாக இருந்ததால் அதை குடிமகன்கள் பெரும்பாலும் அவாய்ட்செய்ததாலும், தேர்தலுக்கு முன் எல்லா சரக்கையும் மிடாஸ் மொத்தாக டாஸ்மாக் தலையில் கட்டிவிட்டதாலும்டாஸ்மாக் குடவுன்களிலும் கடைகளிலும் மிடாஸ் சரக்குகள் ஏகத்துக்கும் குவிந்து கிடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+