பண்ணை வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்-தம்பதியை கட்டிப் போட்டு திருட்டு
பொன்னேரி:
சென்னை அருகே கணவன், மனைவியை தாக்கி 4 முகமூடி கொள்ளையர்கள் தாலி செயின், தங்க வளையல்ஆகியவற்றை பறிந்துக் கொண்டு ஓடினர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தூருசந்த் பக்சார். மார்வாடியான இவருக்கு பொன்னேரி தாலுக்காசோழவரத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இவர் கார், லாரி, டிராக்டர் வாகனங்களுக்கு பைனான்ஸ் தரும்தொழிலும் செய்து வருகிறார்.இதனால் பைனான்ஸ் கட்டாமல் இருப்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து இந்த பண்ணை வீட்டில்வைத்திருப்பது வழக்கம். அதுபோல தற்பொழுது 2 லாரி, ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து பண்ணை வீட்டில்வைத்திருந்தார்.
அங்கு காவலுக்கு ரங்கநாதன் (47) என்பவரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். இவர் தான் மனைவி கமலா(40), மகன் மோகன் (16) ஆகியோருடன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு 8.30 மணிக்கு சோழவரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் அந்த பகுதியில் மின்சாரம்துண்டிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 4 முகமூடி கொள்ளையர்கள் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது ரங்கநாதன் தான் மனைவி கமலா, மகன் மோகன் ஆகியோருடன் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 4 கொள்ளையர்களும் ரங்கநாதனிடம் வந்து பறிமுதல் செய்த வாகனத்தைஎடுத்துச் செல்ல வந்தோம்.
சாவி எங்கே என்று கேட்டனர். அதற்கு அவர்கள் மறுக்கவே கொள்ளையர்கள் அவர்களை உருட்டுக் கட்டையால்தாக்கினார்கள். இதற்கிடையில் கொள்ளையர்களில் ஒருவன் வாகனத்தின் சாவி கொத்தை தேடி எடுத்தான்.
பின்பு அங்கிருந்து கிளப்ப தயாரானார்கள். ஆனால் காவலாளி ரங்கநாதன் அவர்களை உருட்டு கட்டையால்தாக்கினார். கொள்ளையர்களும் பதிலுக்கு தாக்கினர். பின்பு ரங்கநாதன், அவரது மனைவி, மகன் ஆகிய 3பேரையும் அறையில் தள்ளி கட்டிப் போட்டனர்.
பின்னர் கமலா கழுத்தில் கிடந்த 4 பவும் தாலி செயின், தங்க வளையல் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு தப்பிஓடி விட்டனர்.
இந்த நிலையில் மோகன் தன்னை சுற்றி கட்டப்பட்டு இருந்த கயிறை அறுத்துக் கொண்டு ஓடி போலீசுக்கு தகவல்கொடுத்தார்.
பின்னர் போலீசார் அங்கு வந்து கொள்ளையர்களை தேடினார்கள். அப்போது பொதுமக்கள் உதவியுடன் ஒருகொள்ளையனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனிடம் இருந்த தாலி செயினையும்,வளையல்களையும் போலீசார் கைப்பற்றினர்.
பிடிபட்ட கொள்ளையன் கருப்பசாமி என்ற கோபால் (25). மணலியை சேர்ந்தவன். இவரிடம் தப்பி ஓடியகொள்ளையர்களை பற்றி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications