3வது அணியால் பிரச்சினை இல்லை: கருணாநிதி
சென்னை:
தேசிய அளவில் கம்யூனிஸ்டுகள் அமைக்கும் 3வது அணியால் மத்தியில் உள்ளஆட்சிக்குப் பிரச்சினை ஏற்படாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இககூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாரவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியஅளவில் அமையும் 3வது அணியால் மத்திய ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.
இப்போதுள்ள சூழ்நிலையில் 5வது, 6வது அணிகளைக் கூட அமைக்க முடியும். 3வதுஅணியில் ஜெயலலிதாவை சேர்க்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
எனவே அவர் 3வது அணியில் இடம் பெறும் வாய்ப்பில்லை. இந்த அணியால்திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை இப்போது கூற முடியாது. வரட்டும்,பார்க்கலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் போட்டியிடுவோம் எனஅக்கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவரது கருத்துத்தான்அதிகாரப்பூர்வ கருத்து. இளங்கோவன் கருத்தையெல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற பஞ்சாயத்துக்கள் தலித் மக்கள் போட்டியிடுவதற்காகஒதுக்கப்பட்டவை. அங்கு தலித்துகள் நிற்கக் கூடாது என்று பிடிவாதம் பிடிப்பதுநல்லதல்ல.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகத்தான் உள்ளது. கெட்டுப் போயுள்ளதாகஜெயலலிதா கூறுவது எம்.ஜி.ஆர் நகரில நடந்த சம்பவத்தை நினைத்துப் போலும்.
ரேஷன் அரிசியை அமைச்சர்கள் கடத்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளதில் ஒருதிருத்தம். முன்னாள் அமைச்சர்கள் அரிசியைக் கடத்தியதைத்தான் இன்னாள்எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.
நெய்வேலி அணல் மின் நிலைய பங்குகளை விற்பதை எதிர்த்து தொழிற்சங்கங்கள்நடத்தும் போராட்டத்தில் திமுக தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளும் என்றார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications