கொழும்பில் புலிகள் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ துணைத் தளபதி பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கொழும்பில் இன்று காலை நடந்த பயங்கர தற்கொலைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் துணைத் தளபதிமேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்டார்.

மேலும் 2 ராணுவ உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

கொழும்பில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள பணிபிதியா என்ற இடத்தில் தலவட்டுகொடா-கொட்டவாசாலையில் இந்தச் சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிள்களில் வெடிகுண்டுகளுடன் வந்த இரு விடுதலைப் புலிகள் பரமி குலதுங்க சென்ற கார் மீதுமோதினர். இதில் வெடித்து சிதறி கார் தூள் தூளானது. இச் சம்பவத்தில் குலதுங்க, 2 அதிகாரிகள், பொது மக்களில்ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரு புலிகளும் பலியாயினர். மேலும் 9 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள்கலுபவிலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்ஷே அழைப்பு: நிராகரித்தனர் புலிகள்

முன்னதாக நார்வே நாட்டின் தலையீடு இல்லாமல் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவிடுத்த அழைப்பை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக நிராகரித்து விட்டனர்.

ஓஸ்லோவில் நடைபெறவிருந்த முத்தரப்பு அமைதிப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள மறுத்து விட்ட விடுதலைப் புலிகள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில்இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

இதற்கு செப்டம்பர் 1ம் தேதி வரை அவர்கள் கெடுவையும் நீட்டித்துள்ளனர்.

இந் நிலையில் இந்தப் பிரச்சினையில் புதிய திருப்பமாக நார்வே நாட்டின்மத்தியஸ்தம் இல்லாமல் நேருக்கு நேர் நாமே பேசினால் என்ன என்று கேட்டுசுடரொளி பத்திரிக்கை ஆசிரியர் வித்யாதரன் மற்றும் வெளியீட்டாளர் சரவண பவன்மூலமாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேகடிதம் அனுப்பினார்.

ராஜபக்ஷேவின் இந்த அழைப்பை தற்போது விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.இதுதொடர்பாக விடுதலைப புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக தலைவர்புலித்த்வேன் கூறுகையில்,

இலங்கை அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இயலாது. நார்வே நாட்டின்மத்தியஸ்தம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அதுதான் சரியான பாதையாகஇருக்க முடியும்.

நார்வேயைப் புறக்கணித்து விட்டு தனியாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்த இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் இதை நாங்கள்ஏற்க மாட்டோம். நார்வே தான் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தராக இருக்கிறது, இருக்கும்.இதை நார்வேயிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம்.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத நிலையில் இலங்கை அரசுடன்நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது எந்தப்ப் பயனும் தராது. இது கடந்தகாலங்களில் நன்றாகவே உணரப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசுடன் நேரடியானபேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இல்லை என்றார் புலித்தேவன்.

இலங்கை அரசின் அழைப்பை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டதால்இப்பிரச்சினையில் மீண்டும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக புலிகள் அமைப்புக்கு ராஜபக்ஷே அனுப்பிய கடிதத்தில், கருணாகுழுவினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளது.அப்படிச் செய்தால் அரசுத் தரப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வர புலிகள் தயாரா?முதலில் 2 வாரங்களுக்கு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தலாம்.

அது பலன் கொடுத்தால் அந்த உடன்படிக்கையை நீட்டிக்கலாம் என்பது உள்ளிட்டபல்வேறு சாத்தியக்கூறுகளை விளக்கியிருந்தார்.

ஆனால், நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பது இலங்கை அரசு காலங்காலமாககடைபிடித்து வரும் கொள்கை என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+