மாணவிகளை செக்ஸ் வலையில் வீழ்த்தியஇன்டர்நெட் மைய உரிமையாளர் கைது
திருச்சி:
மாணவிகளுக்கு ஆபாசப் படத்தைக் காட்டி தனது வலையில் வீழ்த்தி, அவர்களைநிர்வாணமாக படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தனது இச்சைக்குப்பயன்படுத்தி வந்த இன்டர்நெட் மைய உரிமையாளரை போலீஸார் வளைத்துப்பிடித்துள்ளனர்.
திருச்சியில் பாலக்கரை, பருப்புக்காரத் தெரு, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல இடங்களில்இன்டர்நெட் மையத்தை நடத்தி வருபவர் லியாகத் அலி. 30 வயதான இவர்கம்ப்யூட்டர் என்ஜினியரும் ஆவார்.இன்டர்நெட் மையங்கள் என்ற பெயரில் இவர் ஆபாச மையத்தை நடத்தி வந்துள்ளார்.கம்ப்யூட்டர்களில் ஆபாச வீடியோக்களை டெளன்லோட் செய்து வைத்து அதை காட்டிபணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதையடுத்து இவரது மையம் ஒன்றில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியபோதுஅங்கு ஏராளமான ஆபாச சிடிக்களும் சிக்கின. ஆனால், இந்த சிடிக்களில்இருந்தவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து லியாகத் அலியை கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்டர்நெட் மையத்தை நடத்தி வந்த லியாகத் அலி தனது மையத்திற்கு வரும் இளம்பெண்களை நோட்டமிடுவார். அவர்களில் கல்லூரி மாணவிகள் இருந்தால்அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
மாணவிகள் பிரவுசிங் செய்து கொண்டிருக்கும்போதே, சர்வர் கண்ட்ரோல் மூலம்அந்த கம்ப்யூட்டர்களில் ஆபாச படத்தை ஓட விடுவார்.
அதை பார்க்கும் மாணவிகள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை ரகசியமாககவனித்து பாசிட்டிவான ரியாக்ஷன் கிடைத்தால் அவர்களை தனது வலையில்வீழ்த்தும் நடவடிக்கையில் இறங்குவார்.
அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து உங்களது அழகுக்கு மாடலிங் செய்தால்நன்கு சம்பாதிக்கலாம் என அள்ளி விடுவார். அதை நம்பும் பெண்கள், அப்படியாஎன்று வாய் பிளக்கும்போது, எனக்குத் தெரிந்த மாடலிங் ஏஜென்டுகள் சென்னை,ம்பையில் உள்ளனர். அவர்களிடம் உங்களை அறிமுகம் செய்து வைக்கவா என்றுதூண்டில் போடுவார்.
இதற்கு ஓ.கே. சொல்லும் மாணவிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு அவர்களை விதவிதமாக புகைப்படம் எடுப்பார். முதலில் சாதாரணமாக படம்எடுக்கும் அவர் பின்னர் கொஞ்சம் கிளாமராக இருந்தால் நல்லது என்று கூறி டிரஸ்ஸைகழற்ற வைப்பார்.
பின்னர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வற்புறுத்தி ஆபாசமாகவும் வீடியோஎடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் தான் அவரது ஒரு சென்டரில் இருந்துபோலீசாரிடம் சிக்கியுள்ளன.
பின்னர் அந்த படங்களை மாணவிகளிடம் காட்டி, இதை உனது வீட்டில் காட்டினால்எப்படி இருக்கும் என்று கிடுக்கிப்பிடி போடுவார்.
இதைக் கேட்டு பயந்து போகும் மாணவிகளை தனது ஆசைக்கு இணங்க வைத்துஅவர்களை அனுபவித்து வந்துள்ளார். அதையும் மறைத்து வைக்கப்பட்ட வீடியோகேமரா மூலம் படம் எடுத்துள்ளார். இந்த வீடியோக்களும் போலீசிடம் சிக்கியுள்ளன.
இப்படியாக பல மாணவிகளின் வாழ்க்கையை லியாகத் அலி கெடுத்துள்ளது போலீஸ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடுமே என்பதற்காக லியாகத் அலி சொன்னபேச்சைக் கேட்டு அவரிடம் தங்களை இழந்த மாணவிகளின் எண்ணிக்கை 50க்கும்மேல் இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
லியாகத் அலியை தொடர்ந்து விசாரித்த போலீஸார் அவருக்கு பிரேம்குமார் என்றஇன்னொரு பெயரும் இருப்பதை அறிந்தனர். அந்தப் பெயரைக் கொண்டுபெங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களிலும் இன்டர்நெட் மையங்களைஆரம்பித்து இதுபோன்ற செக்ஸ் மிரட்டல்களில் லியாகத் அலி ஈடுபட்டு வந்ததும்தெரிய வந்துள்ளது.
அவருக்கு நெய்வேலியில் சப்ரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.அதேபோல மும்பையிலும் சீமா என்ற மனைவி உள்ளார்.
திருச்சியில் உள்ள அவரது வீட்டின் உட்புறம் படு ஆடம்பரமாகஅலங்கரிக்கப்பட்டுளளது. தனது பெட்ரூமை அவர் மிகவும் சொகுசாகவடிவமைத்துள்ளார். மாடலிங் ஆசை காட்டி அழைத்து வரும் பெண்களை இந்தஅறையில்தான் அவர் அமர வைப்பாராம்.
அறையின் அலங்காரத்தைப் பார்க்கும் பெண்கள் பெரிய ஆளாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பி அவர் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பின்னர்ஏமாந்துள்ளனர்.
லியாகத் அலியிடிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள்உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications