விழிப்புணர்ச்சி செய்ய போய் பொடா கைதிகளானோம்
சென்னை:
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசிறையில் வாடிக் கொண்டிருக்கும் 21 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று பொடா சட்டத்தின் கீழ் கைதாகி தற்போது ஜாமீனில்விடுதலையாகியிருக்கும் 6 பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டுப்பகுதியில் 6 பெண்கள் உள்ளிட்ட 29 பேரை நக்சலைட்டுகள் என்று கூறி போலீஸார்கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.பின்னர் அனைவரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள்மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள 7 பேரும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுக்குநேர்ந்த கொடுமைகள் குறித்து விளக்கினர். சென்னையைச் சேர்ந்த பத்மா கூறுகையில்,
எழுத்தறிவு, கல்வி விழிப்புணர்ச்சி தொடர்பாக பிரசாரம் செய்யவே நாங்கள்ஊத்தங்கரை பகுதிக்குச் சென்றோம். ஆனால் எங்களை நக்சலைட்டுகள் என்றுபோலீசார் பொய்யான முத்திரை குத்தி கைது செய்து விட்டனர்.
முதலில் சாதாரண வழக்குதான் போட்டனர். ஆனால் ஜாமீன் கிடைக்கப் போவதைஅறிந்த போலீஸார் பொடா வழக்கில் எங்களைக் கைது செய்தனர். நாங்கள் செய்யாததவறுக்காக இரண்டு ஆண்டு சிறையில் வாடினோம்.
எங்களை ஆபாசமாக விமர்சித்தும், மிரட்டியும் வாக்குமூலம் பெற்றனர்.
எங்களிடமிருந்து எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யாத நிலையில் ஆயுதங்கள்பிடிபட்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த பொய்யான வழக்கால எங்களதுகுடும்பங்கள் சிதறிப் போய் விட்டன. தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்துவிட்டோம்.
இன்னும் 21 பேர் சிறையில் வாடி வருகிறார்கள். அனைவரும் ஆண்கள் என்பதால்அவர்களது குடும்பங்கள் திக்கற்றுப் போய் நிற்கின்றன. எங்கள் அனைவர் மீதும்தொடரப்பட்டுள்ள பொடா வழக்கை வாபஸ் பெற்று விடுவிக்க அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி முன்பு, பொடா என்ற கருப்புச் சடடம் தேவையில்லை என்றார்.எனவே இப்போது அவர் முதல்வராகியுள்ள நிலையில் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எங்களை விடுவிக்க முன் வர வேண்டும் என்று கோருகிறோம்.
அதேபோல பொடா நீதிமன்றத்தையும் கலைக்க வேண்டும். பொடாவால்பாதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார் பத்மா.
பேட்டியின்போது சேலம் ரீட்டா, மதுரை ரீனா, தர்மபுரி ரமணி, சிவகங்கை ஆனந்தி,கிருஷ்ணகிரி பகத்சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications