எம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த பழ வியாபாரி!
சென்னை:
மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அத்தொகுதியில் பழ வியாபாரம்செய்யும் பெண்மணியை விட்டு திறக்கச் செய்து அசத்தியுள்ளார் தொகுதி அதிமுகஎம்எல்ஏ நடிகர் எஸ்.வி.சேகர்.
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர் தனது அலுவலகத்தைதொகுதியில் அமைத்துள்ளார்.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.அலுவலகத்தை யாரை வைத்துத் திறக்கலாம் என யோசித்த சேகருக்கு வித்தியாசமானஐடியா ஒன்று உதித்தது. தொகுதியைச் சேர்ந்த ஒருவரை விட்டே அலுவலகத்தைத்திறக்க முடிவு செய்தார் அவர்.
அதன்படி திறப்பு விழாவின்போது சாலையில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தலட்சுமியம்மாள் என்பவரை அழைத்து தனது அலுவலகத்தைத் திறந்து வைக்குமாறுகேட்டுக் கொண்டார். இதை எதிர்பாராத லட்சுமியம்மாளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.
எனக்கு இந்தப் பெருமையா என்று எஸ்.வி.சேகரை வாழ்த்திய லட்சுமியம்மாள்ரிப்பனை வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
மயிலாப்பூர் முகச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி எம்.எல்.ஏ.அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
இடையில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மட்டும் உணவு இடைவேளைக்காகமூடியிருக்கும் என்று சேகர் கூறியுள்ளார்.
மேலும், தொகுதி சம்பந்தமான புகார்கள், கோரிக்கைகள், ஆலோசனைகளை தனக்குஇமெயில் மூலமாகவும் தொகுதி மக்கள் அனுப்பலாம் என்றும் எஸ்.வி.சேகர்கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இ.மெயில் முகவரி: [email protected]
வித்தியாசமான எம்.எல்.ஏ.தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications